அத்தியாயம் 6
இந்து மதத்தின் மூலாதாரங்கள்
இந்து தொன்மவியலின் மூலாதாரங்கள் என்று குறிப்பிடப்படுபவை கீழ்கண்டவைகளே ஆகும்
மூலங்கள்
வேதங்கள் · உபநிடதம் · பிரம்ம சூத்திரம் · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள்
வேத தொன்மவியல்
ரிக் வேதம் · சாம வேதம் · யசூர் வேதம் · அதர்வண வேதம்
இதிகாசங்கள்
இராமாயணம் · மகாபாரதம்
இந்து அண்டவியல்
திருப்பாற்கடல் · வைகுந்தம் · கைலாயம் · பிரம்ம லோகம் · இரண்யகர்பன் · சொர்க்கம் · பிருத்வி · நரகம் · பித்துரு உலகம்
கடவுள்கள்
மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி · திருமகள் · பார்வதி · விநாயகர் · முருகன்
புராண – இதிகாச கதைமாந்தர்கள்
சனகாதி முனிவர்கள் · பிரஜாபதிகள் · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன் · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான் · இராவணன் · புரூரவன் · நகுசன் · யயாதி · பரதன் · துஷ்யந்தன் · வியாசர் · கிருஷ்ணர் · பீஷ்மர் · பாண்டவர்கள் · கர்ணன் · கௌரவர் · விதுரன் · பாண்டு · திருதராட்டிரன் காந்தாரி · குந்தி ·
வேதங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை அதிகம் உள்ளது..ஆதிநாட்களில் வேதம் சப்த வடிவமாகத் தான் சொல்லித் தரப்பட்டுள்ளது..வேத ஸப்தத்தின் மகத்துவத்தை பரமாச்சாரியார் சொல்லி இருப்பது என்ன என்று பார்ப்போம்:
“ஒவ்வொரு சப்தத்தால் ஒவ்வொரு விளைவு வெளியுலகில் உண்டாகிறது ஆராய்ச்சியாளர்கள் சிலவிதமான சப்தங்களை ஸ்வர ஸ்தானங்களில் அமைத்து ஒரு ஏரிக்கு பக்கத்தில் திரும்பத்திரும்ப வாசித்தபோது அதிலிருந்து உண்டான அதிர்வுகளால் ஜலத்தின் மேலே ஒளியானது தூள் தூளாக பிரகாசித்துக் கொண்டு அப்புறம் அந்த ஒளித் துகள்கள் எல்லாம் ஒழுங்கான ஒரு வடிவத்தில் அமைந்தன..
ஒவ்வொரு விதமான ஸ்வர வரிசைக்கும் இப்படி ஒரு ஒளி உருவம் உண்டாயிற்று இந்த விஞ்ஞான முடிவின்படி வேதமந்திர சப்தங்களால் தேவதா ரூபங்களின் தரிசனம் பெற முடியும் என்பதை நம்ப முடிகிறது..
ஒலியானது ஒளியாக மட்டும்தான் வெளியுலகில் மாறுகிறது என்றில்லை அது வேறு பல விதங்களில் வெளியே வியாபித்து பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது வேத சப்தங்கள் வெளிச் சூழலில் பரவிக்கொண்டு இருப்பதாலேயே லோகத்தில் பரம மங்களம் உண்டாகும் அப்படிப்பட்ட சக்தி அந்த மந்திரங்களுக்கு இருக்கிறது சப்தம் மட்டுமில்லாமல் அதன் ஸ்வர ஸ்தானத்திற்கும் சக்தி உண்டு
மந்திர மகிமையில் பட்ட மரம் கூட துளிர்க்கும் என்பதை திருவானைக்காவில் பிரத்யட்சமாக பார்த்தவர்கள் இருக்கிறார்கள் ஜம்பு என்கிற வெண் நாவல் மரம் தான் அங்கே ஸ்தல விருட்சம் அதனாலேயே அந்த ஊருக்கு ஜம்புகேஸ்வரம் என்று பெயர் இருக்கிறது அங்கே இருந்த தல விருட்சம் பட்டுப்போய் ஒரே ஒரு பட்டை தான் ஏதோ கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருந்த காலத்தில் கானாடுகாத்தான் செட்டியார்கள் திருப்பணி செய்தார்கள் அப்போது இந்த பட்ட மரத்திற்கு ஏகாதச ருத்ராபிஷேகம் பண்ணினார்கள் மந்திர சக்தியால் அந்த மரம் அப்பொழுதே துளிர்த்தது”
இதன் மூலம் வேத மந்திரங்களின் சக்தி என்ன என்பது நமக்கு புலனாகிறது..

ரிக் வேதம்

ரிக் வேதம் பல ரிக்குகள் ( மந்திரங்கள்) அடங்கியது.. ரிக் வேதத்தில் எட்டு அஷ்டகங்கள் அல்லது பத்து மண்டலங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுபாகங்கள், 1028 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள், 10647 மந்திரங்களை கொண்டது.!
ரிக் வேத மந்திரங்கள் “இயற்றப்பட்ட வை அல்ல”( Not composed) அவை ரிஷி முனிவர்களால் தியானத்தின் போது “கேட்கப்பட்ட(heard) துதிகள்” எப்படி ரேடியோ அலை வரிசையில் ஒலிபரப்பு கேட்பது போல் கண்டுபிடிக்க பட்ட மந்திரங்கள்.. ரிக் வேதம் என்பது உலக மகா அதிசயம்..இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தொகுப்பை எவரும் அட்சரம் மாறாமல் வாய்ச்சொல் மூலமே 6000 வருடங்களுக்கு மேலாக பரப்பியதும் இல்லை.. இதுவரை எழுதப்பட்ட இலக்கியங்களில், கவிதைத் தொகுப்புகளில் காணப்படும் கருத்துக்களை விட உயரியதாகும்.. ” சர்வே ஜனா சுகினோபவந்து” .. எல்லோரும் வாழ்க, இன்புற்று வாழ்க என்று கடைசி மந்திரத்துடன் முடிகிறது ரிக் வேதம்..
மேற்குறிப்பிட்ட பத்து மண்டலங்களில் முதல் மண்டலமும், பத்தாவது மண்டலமும் பல உதிரி மந்திரங்களின் தொகுப்பு.. இடைப்பட்ட எட்டு மண்டலங்களில் 2 முதல் 7 வரை குடும்ப மண்டலங்கள் என்று கூறலாம்.. அதாவது, ஒவ்வொரு ரிஷியின் பரம்பரையில் வந்த பாடல்களை வேத வியாசர் தொகுத்துள்ளார்..
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஏராளமான நல்ல கருத்துக்களில் ஒரு சிலவற்றை வாசகர்களுக்கு அளிக்கிறேன்.( Courtesy: Kamakoti.org)..
ருக் 8-59-5
1. நம்முடைய மேன்மைக்காகவே நாம் உண்மை பேசுகிறோம்.
ருக் 9-74-3
2. இந்த பரந்த உலகில் நேர்மை வழியினைக் கடைபிடிப்போர் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
ருக் 4-23-10
3. உண்மையைத் தேடுவோர் அதனைக் கட்டாயம் கண்டு கொள்வர்.
ருக் 10-61-10
4. உண்மையைக் கடைபிடிப்போர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் இனம் கண்டு கொள்வர்.
ருக் 9-73-8
5. உண்மையைக் காப்பவரையும் நேர்வழி நடப்பவரையும் எவரும் வெற்றி காண இயலாது.
ருக் 9-75-2
6. உண்மை பேசுவது இனிமையையும் அன்பையும் உண்டாக்குகிறது..
இது ரிக் வேதத்தின் லட்சத்தில் ஒரு துளி.. இது போன்ற இன்னும் பல கருத்துக்கள் உள்ளன..
ரிக் வேதத்தினை மூன்றாகப் பிரிக்கலாம்..அவை: 1) சமய மந்திரம் 2) தத்துவ மந்திரம் 3) சமயத் தொடர்பற்ற பொது மந்திரங்கள்..
இவற்றில் சமயம் தொடர்பான துதிக்கும் மந்திரங்கள் தான் அதிகம்..இது தவிர நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பிரபஞ்சத்தின் காரணம் என்ன? போன்றவை தத்துவ மந்திரங்கள்.. சமயத் தொடர்பற்ற பொது மந்திரங்களில் சுப காரியங்களின் நேரத்தில் சொல்லும் மந்திரங்களும், அபர காரியங்களின் சொல்ல வேண்டிய மந்திரங்களும் உள்ளன..
அடுத்து நாம் அறிந்து கொள்ள இருப்பது யஜுர் வேதம்..
அத்தியாயம் 7
யஜுர் வேதம்

யஜுர் வேதம் என்றால் வேள்வி அறிவு என்பது பொருள்..யஜுஸ் என்றால் யாகம் அல்லது வேள்வி என்று பொருள்.. இந்த வேதம் பொது வழிபாடு, கிரியைகள் ( செயல் முறை) யாகங்கள் என்பவை பற்றியும் அவற்றின் செயலாக்கம் செய்வது பற்றியும் எடுத்துரைக்கிறது..
இந்த வேதம் கி.மு 1500க்கும் கி.மு 500க்கும் இடையே எழுத்து வடிவம் பெற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது..
யஜுர் வேதம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது..அவை கிருஷ்ண யஜுர் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேதம் என்பன.. இரண்டு பகுதிகளிலுமே செயல் முறைகளுக்கான(கிரியைகள்) ஸ்லோகங்களை விவரிக்கின்றன..கிருஷ்ண யஜுர் வேதத்தில் அதிகமாக உரைநடை விளக்கமாகவும், விரிவான அறிவுறுத்தல்களும்( instructions) உள்ளன.!
கிருஷ்ண யஜுர் வேதத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை 1) தைத்திரிய சம்ஹிதை 2) மைத்ராயினி சம்ஹிதை 3) சரக- கதா சம்ஹிதை 4) கபிஸ்தல- கதா சம்ஹிதை..
சம்ஹிதைகள் ஒருவகை இந்து சமய நூல்கள் ஆகும்..சம்ஹிதைகளை மந்திரங்கள் என்றும் கூறுவர்.. குறிப்பிட்ட தேவைகளுக்கான மந்திரங்கள், வழிபாட்டு முறைகள்,0வேள்விகளுக்கான சூத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும்..வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன் படும்.. அதர்வண சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம்,பிசாசு மந்திரங்களுக்கு என்பனவற்றை கூறுகிறது..
இவற்றில் அதிக பயன்பாட்டில் உள்ளது தைத்திரிய சம்ஹிதையே ஆகும்..இது 7 காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காண்டத்திலும், அவற்றுடன் இணைந்த பிரமாணம் என்று சொல்ல ப்படுகிற வேத விளக்கம் கொண்டுள்ளன.. சில காண்டங்கள் அவற்றுடன் இணைந்த சிரௌத சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதி சாக்கியங்கள் என்று அழைக்கப்படும் துணை நூல்கள் (suppliment) கொண்டு விளங்குகின்றன..
இவற்றில் ஆரண்யகங்கள் வேத ருக்குகளின் பின்னால் உள்ள மெய்யியல் (truth) பற்றி கூறுகின்றன.. அமைதியான சூழலில் காட்டிற்குச் சென்று அங்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களைக் கொண்டமையால் ஆரண்யகங்கள் என்று பெயர் பெற்றன..வேள்விகளைச் செய்ய இயலாத முதியவர்கள், துறவிகள், ஓய்வு பெற்றுக் காட்டிற்குச் சென்று பின்னர் கற்பதற்காக உருவாக்கப்பட்டது.. இவற்றில் வேள்வியை விட தியானமே மிகவும் மேலானது என்று வலியுறுத்தப்படுகிறது..
இனி யஜுர் வேதத்தின் பிரிவுகளான கிருஷ்ண யஜுர் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேதம் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்..