கண்ணாரக் கண்டேன் கந்த சஷ்டி கவசம் பிறந்த தலத்தினை

நம் இந்து சமயத்தின் வழிபாடுகளை வைத்து ஆறு மாதங்களாக ஆதி சங்கரர் ஷண்மதங்கள் என்று பிடித்துள்ளார்..அவை சைவம்- சில வழிபாடு, வைணவம்- விஷ்ணு வழிபாடு, சாக்தம்- சக்தி வழிபாடு, காணாபத்யம்- விநாயகர் வழிபாடு, கௌமாரம்- முருகப்பெருமான் வழிபாடு, மற்றும் சௌரம்- சூரிய வழிபாடு.. இவற்றில் கௌமாரம் என்று சொல்லப்படும் சொல்லில் கௌ என்றால் மயில் என்று பொருள்..ஆகவே கௌமாரன் என்றால் மயில் வாகனன் என்று பொருள்.. அதுதான் தமிழில் குமரன் என்று ஆகியது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் அல்லவா!! அத்தகைய குன்று தான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னி மலை..

பால தேவராயர் ஸ்வாமிகள் என்பவர் ஒரு தமிழ் புலவர்.. இவர் 1857ல் தொண்டை நாட்டில் உள்ள வல்லூரில் வாராச்சாமிப் பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.. இவரது இயற்பெயர் தேவராயன் என்பதாகும்.. முந்தைய காலத்தில் இவர் கிராமத்தில் கணக்கு பிள்ளையாக (தற்போது கிராம நிர்வாக அலுவலர்) இருந்தார்.. அந்த வேலையை செய்து கொண்டு இருந்தார்..மக்களுக்கு அழிவு வராமலும் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் ( தலை முதல் பாதம் வரை) வரிசைப் படுத்தி இறைவனை வேண்டி பாடுதல் “காப்பு கவசம்” என்று அழைக்கப்பட்டது..அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஒரு இடத்தில் இருந்து கொண்டு இந்த காப்பு பாடல்களைச் சொல்ல வேண்டும்..

நம் முன்னோர்கள் நாம் மருத்துவரிடம் உடல் உறுப்புகளில் ஏற்படும் உபாதைகளை எதையும் மறைக்கக் கூடாது; கூச்சப்படக் கூடாது; அதே போல வழக்கறிஞர்களிடம் பொய் சொல்ல கூடாது என்றும் கூறியுள்ளனர். மனித உடல் உறுப்புகள் அனைத்தையும் படித்தவர் (anotomy) மருத்துவர்கள்.. நமக்கு ஒரு தலைவலி வந்தால் கூட அதற்கு நூறு காரணங்கள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..மன அழுத்தம், அஜீரணம், கண் பார்வை கோளாறு இது போன்ற எத்தனையோ காரணங்களினால் தலைவலி வரும்.. மருத்துவரிடம் நமது உடல் உபாதைகளை கூச்சமின்றி தெரியப்படுத்தினால் முறையான வைத்தியம் செய்து அந்த உறுப்புகளை அவர் சீர் செய்வார்.. மால்மருகனே மருத்துவனன்றோ!! வைத்தியநாதன் மகனல்லவா!!

அந்த வகையில் பால தேவராயர் ஸ்வாமிகளால் இயற்றப்பட்ட காப்புக்கவசம் ” கந்த சஷ்டி கவசம்” .. இறைவனை வேண்டி கவசப் பாடல்கள் ஆறு உள்ளன..அவை 1) சில கவசம் 2) கந்த சஷ்டி கவசம் 3) சண்முகக் கவசம் 4) சக்திக் கவசம் 5) விநாயகர் அகவல் 6) நாராயணக் கவசம்..

கந்த சஷ்டி கவசத்தை ஸ்வாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னி மலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.. கவசத்தில் சொல்லி உள்ள சிரகிரி என்பது இந்த மலையே ஆகும்.!

கடந்த மார்ச் மாதம் 6-8 தேதிகளில் ஈரோட்டில் Radha prasad என்ற ஹோட்டலில் தங்கி வாடகைக் கார் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில கோயில்களை தரிசனம் செய்தேன்.. அதில் 7ஆம் தேதி இந்த கோயிலுக்கு நான் சென்று இருந்தேன்.. ஈரோடு பெருந்துறை ரோட்டில் பெருந்துறையில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் ஈங்கூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிலும் உள்ளது..

இதன் தல புராணத்தில் சொல்லப்பட்டது யாதெனில்,

முன்னோரு காலத்தில் அனந்தன் என்கிற நாகராஜனுக்கும் வாயு பகவானுக்கும் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது.! அனந்தன் மகாமேரு மலையை சுற்றிக் கொள்ள வாயு பகவான் தன் திறமை முழுவதும் பயன் படுத்தி காற்று வீசினார்.. அதனால் மேருமலையின் உச்சிப் பகுதி சிரம் பூந்துறை ( தற்போது பெருந்துறை) யில் விழுந்ததால் அது இந்த மலையாக காட்சி அளிக்கிறது.. இந்த மலைக்கு சிரகிரி, புஷ்ப கிரி, மகுட கிரி மற்றும் சென்னிமலை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.!

இந்த மலையில் இருந்து 3 மைல் தொலைவில் நொய்யல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்று ஒரு கிராமம் உள்ளது..அது மருவி கொடுமணம் என்று கூறப்படுகிறது.. அந்த ஆற்றின் கரையில் புதைந்திருந்த கந்தப் பெருமான் சிலையை ஒரு செல்வந்தர் கண்டெடுத்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து உள்ளார்!

இந்த கோவிலின் பிராதான தெய்வமான சுப்பிரமணிய சுவாமி நின்ற திருக்கோலத்தில் வலது கரத்தில் வேல் தாங்கி காட்சி தருகிறார்.. அடிவாரத்தில் இருந்து மலைமேல் செல்ல 1320 படிக்கட்டுகள் உள்ளன.. திருக்கோயில் வரை காரில் செல்லும் வசதியாக தார் சாலை அமைக்க பட்டுள்ளது..

தைப்பூசத்தின் போது தேர் திருவிழா, திங்கள் கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் ஆகிய நாட்கள், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன..

இந்த ஊர் நெசவுத் தொழிலுக்கு புகழ் பெற்றது.. நூல்கள் ஒன்றையொன்று பின்னி பிணைவது போல முருகப்பெருமானின் அருளும் நமது வாழ்வில் பின்னப்படட்டும்

வாசகர்களே.! தாங்களும் ஒரு முறை இந்த மருத்துவ முருகனைத் தரிசித்து பயன் பெறலாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்..

” சரணம் சரணம் சரவண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம் ஓம்”

Dear Readers

I visited the temple of Lord Subramanya Swamy last 7th of March.. This temple is situated on the top of a hill called Chennimalai.. This town is famous for weavers.. This temple is 13 kms away from Perineural on the Erode Perunthurai road..

Here the famous Kandha sashti kavasam written by poet Bala Devaraya swamigal was debuted.. This kavasa lists out our parts of the body and request Lord Subramanya to save them from any thing..The other name of the hill is Sira giri..

The Lord Subramanya is in a standing posture with his weapon Vel on his right hand..There are about 1320nsteps to climb the hill from the foothills…

Readers can make a visit and to get the blessings of Lord Subramanya Swamy..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: