சீமாலிகன் கதை

“அடடே! வாங்க வாங்க குழந்தைகளா!!….ஒ! கதை கேக்கற டைம் வந்திடுச்சா?.. குட் குட்.. கரெக்டா வந்துட்டீங்க!!”
” குட் ஈவினிங் தாத்தா..”
” குட் ஈவினிங்.. சரி சரி.. வாசல்ல கதவுகிட்ட சேனிடைசர் வச்சிருந்தேனே.. எல்லோரும் கையை க்ளீன் பண்ணி கிட்டீங்களா?”
” ஆமாம் தாத்தா.. அதான் வாசல்லயே போர்டு எழுதி போட்டிருக்கீங்களே..!”
” கரெக்ட்.. உங்களுக்கு எல்லாம் அப்ஸர்வேஷன் பவர் எப்படி இருக்குன்னு பார்த்தேன்.. சூப்பர்.. ஆங்! அது யாரு புதுசா ஒரு ஆறு குழந்தைகள்?”
” அவங்களா தாத்தா.. அவங்க பக்கத்து ப்ளாக்.. நீங்க கதை சொன்னத அவங்க கிட்ட சொன்னேன்.. அவங்களும் கதை கேக்க வந்துட்டாங்க.. அவன் ராஜேஷ், அது விநாயக், அது சுபாஷிணி, அது பவித்ரா, அது கலைச் செல்வி, அது ரிஷி..”
” அடடா!!! நம்ம கத சொல்றது பெருசா போகும் போல இருக்கே!! ஆனால் நீங்க எல்லாரும் கத கேட்டா மட்டும் போறாது..அதுல சொல்ற நல்ல குணங்களை வளத்துக்கணும்..தெரிஞ்சுதா?.. ஆமாம், சாகேத்தும், வ்ருந்தா எங்கே? அவங்க வரலயா?”
” இல்ல தாத்தா, அவங்க, அவங்க தாத்தா வீட்டுக்கு போயிருக்காங்க.. நெக்ஸ்ட் வீக் வந்துடுவாங்க..”
” ஒகே.. ஓகே.. நீங்க நான் இன்னைக்கு சொல்ற கதய அவங்களுக்கு சொல்லணும்..சொல்வீங்களா?”
” சொல்வோம் தாத்தா..”
” சரி, நாம கதைக்கு வருவோம்..போன வாரம் என்ன கத சொன்னேன்?”
” பேட் ஃப்ரெண்ட்ஷிப் பத்தி..மணிகுண்டலன் கத”
” வெரி குட்..நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே!! இன்னைக்கும் நாம பேட்ஃப்ரண்ஷிப் பத்தின இன்னொரு கத சொல்லப் போறேன்.. அதுக்கு முன்னாலே ஒரு குட்டி கத சொல்றேன்..இது பழங்காலத்துக் கத.. பஞ்ச தந்திரக் கதன்னு பேரு..
ஒரு ஊர்ல, வயல் காட்டுல…நீங்க வயல் பார்த்திருக்கீங்களா?..ஊருக்கு போகும் போது..பஸ்ல, ட்ரெயின்ல, கார்ல போகும் போது பார்த்திருக்கீங்களா?”
” பாத்திருக்கோம்”
” ஆங்..! அந்த வயல்ல ஒரு எலியும், தவளையும் இருந்துச்சாம்..அது ரெண்டும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.. எப்படின்னா? ரெண்டும் எல்லா இடங்களுக்கும் ஒண்ணாவே போகும்.. ரெண்டும் பிரிஞ்சுடக் கூடாதுன்னு ஒன்றோடு ஒன்று கால நூல் வச்சு கட்டி கொண்டது”

” தாத்தா.. ஒரு டவுட்..”
” தெரியும்..நீ என்ன கேக்கப் போறேன்னு..அதுங்களுக்குதான் கை இல்லையே? எப்படி நூலால கட்டி இருக்கும்னு.. அதானே? இப்ப பேர்ட்ஸ் எல்லாத்துக்கும் கை இருக்கா? இல்லயில்ல! அப்ப எப்படி கூடு கட்றது? அப்படி தான் இதுவும்..”
சரி.. அப்படி வயல்ல போய்கிட்டு இருந்தப்ப ஒரு நாள் தவளை தன் தலைக்கு மேல ஒரு பருந்து தவளைய பிடிக்க பரந்துகிட்டு இருந்தத பாத்தது..உடனே தன்ன அந்த பருந்து பிடிச்சிகிட்டு போயிடும்னு பயந்து சட்டுன்னு பக்கத்துல இருந்த தண்ணி குட்டைக்குள்ள குதிச்சுது…அதோட எலியும் சேர்ந்து தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு..ஏன்னா? அதுங்க ரெண்டும் தான் கால நூலில் கட்டியிருந்துச்சு இல்லயா?..தண்ணீல விழுந்ததும் எலி மூச்சு திணறி செத்துப் போச்சு..அதனால தண்ணிக்கு மேல மிதந்துச்சு.. பருந்து பாத்துது. தவள போனா என்ன? எலி கெடச்சுதேன்னு.. எலிய கொத்திண்டு போக, கூடவே அந்த முட்டாள் தவளையும் பருந்துக்கு ஃபுட் ஆயிடுச்சு.. இப்ப தெரியுதா..இது முட்டாள்தனமான ஃப்ரெண்டஷிப்..”
சரி..இப்ப நான் இன்னொரு கதை சொல்லப் போறேன்..அது கிருஷ்ணர் ஒம்மாச்சி கத.. உங்களுக்கு எல்லாம் கிருஷ்ணர் ஒம்மாச்சி தெரியுமில்ல.. இந்த வாரம் கூட அவருக்கு பர்த் டே வந்துது இல்ல…?”
” ஆமா தாத்தா.. அதான் உங்களுக்கு சீடை முறுக்கு எல்லாம் கொண்டு வந்து இருக்கோம்..”
” அப்படியா.. சந்தோஷம்.. அதெல்லாம் நீங்களே வீட்டுக்கு எடுத்துகிட்டு போய் தாத்தா பங்குனு சொல்லி சாப்பிடுங்க.. தாத்தாவுக்கு பல் கடிக்க முடியாது குழந்தைகளா… ஓகே..நாம கதைக்கு வருவோம்…
அந்த கிருஷ்ணர் ஒம்மாச்சி கோகுலத்தில தன் ஃப்ரண்ட்ஸ் கூட மாடு மேய்ச்சிண்டு இருந்தார்..கோகுலதுக்கு பக்கத்தில தான் யமுனை ரிவர்.. அதுக்கு அந்த பக்கம் சீமாலிகன் அப்படீன்னு ஒரு பையன்.. அவன் அங்க வில் வச்சுண்டு அங்க இருந்த முயலு, மாதிரி சின்ன மிருகங்கள வேட்டை ஆடிண்டு இருந்தான்..ஆனா ஒரு அம்பு கூட எந்த மிருகத்தின் மீதும் படல.. அவனுக்கு எந்த அஸ்திரமும் யூஸ் பண்ண சரியா தெரியல.. அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவன கிண்டல் பண்ணாங்க.. அவங்க எல்லாம் உனக்கு கிருஷ்ணர் மாதிரி அம்பு விட தெரியல.. அவனுக்கு எல்லாம் தெரியும் அப்படீன்னு சொன்னாங்க..உடனே சீமாலிகன் அக்கரையில இருக்கற கோகுலத்துக்கு வந்து கிருஷ்ணர் கிட்ட ஃப்ரெண்ட் ஆனான்.. ரெண்டு பேரும் ஒண்ணாவே சுத்திக்கிட்டு இருந்தாங்க.. கிருஷ்ணர் கிட்டேருந்து எல்லா அஸ்த்திர வித்தையும் கத்துகிட்டான்..

அதனால அவனுக்கு மண்ட கனம் ஜாஸ்தி ஆயிடுச்சு.. எல்லார் கிட்டயும் வம்பு பண்ண ஆரம்பிச்சான்.! கிருஷ்ணர் ஃப்ரெண்ட் வேற…கேக்கணுமா..! எல்லாரும் கிருஷ்ணர் கிட்ட வந்து கம்ப்ளேயின்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.. ஆனால் கிருஷ்ணர் அத கண்டுக்கல. ஏன்னா? அவன் அவரோட ஃப்ரெண்ட் ஆச்சே..
இப்படி இருக்கச்சே ஒரு நாள் நாரதர் அங்க வந்தார்.. அவரும் கிருஷ்ணர் கிட்ட சீமாலிகன தண்டிக்க சொல்லி கேட்டார்..ஆனா கிருஷ்ணர் அவன் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆச்சே அவன எப்படி நான் தண்டிக்கறதுன்னு தெரியல அப்படீன்னு சொல்லிட்டார்..
நாரதர் நேராக சீமாலிகன் கிட்ட போனார்..சீமாலிகா… கிருஷ்ணர் உனக்கு எல்லாம் அஸ்திர வித்தையும் சொல்லி கொடுத்தாரா அப்படீன்னு கேட்டார்.. அவனும் பதிலுக்கு ஆமா எல்லாம் சொல்லி கொடுத்தார் அப்படீன்னு சொன்னான்..
அதுக்கு அவர் ” இல்ல.. அவர் இன்னும் ஒரு வித்தைய சொல்லி த் தரல.. தெரியுமா”
” அப்படியா அது என்னன்னு அவன் கேட்டான்.. அதுக்கு நாரதர் அது சக்ராயுதம்.. அப்படீன்னு சொன்னார்..
“நீங்க சக்ராயுதம் பார்த்திருக்கீங்களா? டிவில மகாபாரதத்தில கிருஷ்ணர் கையில சுத்திண்டு இருக்குமே… நீங்க தீபாவளிக்கு கூட அத கொளுத்துவீங்க இல்ல?”
” ஆமா ஆமாம்..போன தீபாவளி அன்னைக்கு அது என் கையில நெருப்பு பட்டுது..”
” நீங்க ஜாக்ரதையா இருக்கணும்..!”
இந்த ஃபோட்டோவைப் பாருங்க… கிருஷ்ணர் ஒம்மாச்சி கைல சக்ராயுதம் வச்சிண்டு இருக்கறத…

சீமாலிகன் கிருஷ்ணர் கிட்ட வந்து ஏன் எனக்கு சக்ராயுதம் யூஸ் பண்ண சொல்லித் தரல அப்படீன்னு சண்டை போட்டான்.. கிருஷ்ணர் ” அத யூஸ் பண்றது ரொம்ப கஷ்டம்…ஜாக்ரதையா இருக்கணும்” அப்படீன்னு சொன்னார்.. அவன் கேக்கல..
சரின்னு.. கிருஷ்ணர் சக்ராயுதத்தை அவன் கைல குடுத்து முகத்திலேருந்து தள்ளி வச்சு பிடிச்சுக்க சொன்னார்..ஆனா சக்கரம் சுத்தின வேகத்தில சீமாலிகனால அத கண்ட்ரோல் பண்ண முடியலை..அது நேரா அவன் கழுத்தை வெட்டிடுத்து..சீமாலிகன் செத்து போயிட்டான்.. நாரதர் தான் வந்த வேல முடிஞ்சுதுன்னு கிளம்பி போயிட்டார்.. கிருஷ்ணர் தன் ஃப்ரெண்ட் தான் சொன்னத கேக்காம செத்து போயிட்டானேன்னு ரொம்ப வருத்தப்பட்டார்..
குழந்தைகளா! இதுலெருந்து என்ன தெரியறது?.. ஒம்மாச்சியே ஆனாலும் பேட் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்க கூடாதுன்னு… புரிஞ்சுதா?
” புரிஞ்சுது..”
“ஓகே… எல்லாரும் வீட்டுக்கு போய் தூங்கணும்..அடுத்த ஞாயிற்றுக் கிழமை வேற ஒரு புது கதை சொல்றேன்.. குட்நைட்..