அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் திருவதிகை கடலூர் மாவட்டம்

ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக சரநாராயண பெருமாள்

கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி சென்னையில் இருந்து வாடகைக் கார் மூலம் பயணம் செய்து கடலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களை தரிசனம் செய்தேன்.. அதில் திருவதிகையில் எழுந்த்தருளி இருக்கும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத சரநாராயணப் பெருமாள்.. உற்சவர்.. தரிசனம் மேலே கொடுத்துள்ளேன்..

பண்ருட்டி கடலூர் போகும் ரோட்டில் பண்ருட்டியில் இருந்து சுமார் 2கி.மீ தொலைவில் உள்ளது.. நான் மற்ற கோவில்களை தரிசித்து இந்த கோயிலுக்கு வந்த போது இரவு மணி 7.30 மணி ஆகிவிட்டது..ஆகவே இரவில் தான் புகைப்படங்கள் எடுக்க முடிந்தது.. இந்த கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானது.. பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பிரம்மாண்ட புராணத்தின் 4வது சர்க்கத்தில் திரிபுரவதிகை என்று குறிப்பிடப்பட்ட தலம்.. ஸ்ரீ சரநாராயண மகாத்மியத்தில் நாராயணனின் பெருமையை நாரதரும் பிரம்மனும் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது..திரிபுரத்தை எரிக்க சிவனுக்கு இங்கே வில் கொடுத்தமையால் சரநாராயணர் என்று பெயர் வந்தது.. பெருமாள், தாயார் ஹேமாம்புஜவல்லி, மார்கண்டேய மகரிஷி உடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார்.. தெற்கு திருமுக மண்டலம்.

மகாபாரதப் போரின் முடிவில் வேத வியாசர் மகாபாரதத்தில் அர்ஜுனன் தான் பல க்ஷேத்திரங்களை தரிசித்த போது திருவதிகை கண்டேன் என்று குறிப்பிட்டதாக குறிப்பு உள்ளது..

இந்த திருத்தலத்தில் விசேஷம் என்னவென்றால் ஸ்ரீ நரசிம்மர் சயனத்திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.. கால் பக்கத்தில் தாயார் அமர்ந்து காட்சி தருகிறார்..பெருமாள் வகராசுரனை அழித்து ஓய்வெடுத்ததால் சயனத்திருக்கோலத்தில் உள்ளதாக நரசிம்ம புராணம் கூறுகிறது.

திருப்பாவையில் மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் என்ற பாசுரத்தில் உறங்கும் சீரிய சிங்கம் என்று குறிப்பிடுவது இந்த பெருமாளைப் பற்றி தான்… இந்த பெருமாளுக்கு ஸ்ரீ பிரசன்ன நரசிம்மர் என்று பெயர்..

புரட்டாசி 30 நாட்களும் மின்சார விளக்குகள் அணைக்கப் பட்டு நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளியூட்டுவது சிறப்பாகும்.. மார்கழி மாதம், பங்குனி உத்திரம், ரதசப்தமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன..

திருக்கோயில் திறந்து இருக்கும் நேரம்

காலை 6.30 முதல் 11 மணி வரை

மாலை 5.30 முதல் 8.30 மணி வரை

வாசகர்களே! தாங்கள் அனைவரும் ஆச்சரியமான இந்த திருக்கோலத்தினை தரிசனம் செய்து பயன் பெற அந்த நரசிம்ம பெருமாளையே ப்ரார்த்திக்கிறேன்..

ஜெய் நரசிம்மா!!! ஸ்ரீ நரசிம்மா!!!!

This is the temple of God Narasimha in Thiruvathigai near panrutti.. This temple located about 2 kms from Panrutti..

I visited this temple in February this year, but it was around 7.30pm and the photos were taken in night..

The speciality of this temple is that Lord Narasimha showers his blessings in a sleeping posture Sayana thirukolam facing south.. It’s stated that during the time when Lord Siva wanted to burn the entire 3 lokams (Thiripuram) Lord Vishnu gave him the arrow(Saram) That’s why the Lord earned the name Saranarayana.. Goddess is Hemambujavalli..

Temple timings 6.30 am to 11.00 am

Evening 5.30 pm to 8.30 pm.

Readers can have a beautiful dharshan of the Lord Narasimha in a different posture and get his blessings

Jai Narasimha. Sri Narasimha

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

One thought on “அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் திருவதிகை கடலூர் மாவட்டம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: