கடந்த பிப்ரவரி மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூர் திவ்ய தேசங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.. சென்னையில் இருந்து வாடகைக் கார் மூலம் சென்றேன்.. முன்னதாக முகநூல் நண்பர் திரு.சம்பத் அய்யங்கார் அவர்களைத் தொடர்பு கொண்டு எவ்வாறு தரிசனம் செய்யலாம் என்று தரிசன நிரலைக் கேட்டேன்.. அவர் உடனடியாக மனம் உவந்து திருநாங்கூர் பக்கத்தில் உள்ள மங்கைமடம் எனும் ஊரில் தங்க வசதி உள்ளது என்றும் அந்த ஊரில் திரு பத்ரி நாராயணன் என்பவரை தொலைபேசி மூலம் அறிமுகம் செய்து வைத்தார்..
22ஆம் தேதி காலையில் புறப்பட்டேன்..மங்கைமடம் ஊரில் திரு.பத்ரி அவர்களை சந்தித்தேன்.. அவர் தங்கும் விடுதி கொடுத்து உணவிற்கும் ஏற்பாடு செய்து கோவில்களில் தரிசனம் செய்து வைக்க இன்னோரு அன்பரை அறிமுகம் செய்து வைத்தார்.. அவர் பெயர் திரு. வைகுண்டன். அவர்அனைத்து கோவில்களுக்கும் அழைத்து சென்றார்..நாங்கூர் திவ்ய தேசங்கள் குறித்து விரைவில் தனி பதிவு செய்கிறேன்..
அந்த அன்பர் திரு விள நகர் பெருமாளைப் பற்றி மிகவும் சிலாகித்து சொல்லி அவசியம் தரிசிக்க வேண்டும் என்று எனது ஆவலைத் தூண்டினார்..வரதராஜன் அழைக்க வாராமல் போலாமோ? நான் அந்த கோயிலுக்கு சென்றேன்..
இந்த கோயில் மயிலாடுதுறையிலிருந்து பொறையார் போகும் வழியில் 7.5 கி.மீ தொலைவில் செம்பனார் கோயில் அருகே அமைந்துள்ளது.. மிகப் பழமையானது..

இங்கே ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக 12 அடி உயரத்தில் வரதராஜ பெருமாள் காட்சி தருகிறார்..கிழக்கே திருமுக மண்டலம்..பிரகாரச் சுவற்றில் கீதோபதேசம் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது..சுற்றுப் பிரகாரத்தில் பெருந்தேவி தாயாருக்கு தனிச் சன்னதி உள்ளது.. இங்கே அகஸ்த்திய மாமுனிவருக்குப் பெருமாள் காட்சி கொடுத்ததாக செவி வழி செய்தி.. புஷ்கரணி ஏதுமில்லை.. ஒருவேளை தூர்ந்து போயிருக்கக் கூடும்..ஸ்தல விருக்ஷம் பற்றித் தகவல் ஏதுமில்லை.. ஆனால் பெருமாள் ஆஜானுபாகுவான அமைப்போடு காட்சி அளித்தது கண்களை விட்டு அகலவில்லை.
பெருமாள் திருவடிகளே சரணம்
This temple of Sri Perundevi samedha Sri Varadharajar with Sridevi and boodevi in the sanctorum..This God is Twelve feet height facing east..
A separate Sannidhi is there for Perundevi Thayar within the pragaram ( compound).. There is no pushkarani( temple tank) might have been ruined.. there is no sthala viruksham(temple tree). A hearsay is that Saint Agasthiya visited this temple and had dharshan
This temple is located in Vila Nagar near Sembanar koil 7.5 Kms reach from Mayiladuthurai on the Mayiladuthurai to Porayar road.. Readers are requested to pay a visit to the mighty Perumal