
கண்களில் நீர் குளம் கன்னத்தில் வழியவில்லை
எண்ணத்தில் திண்ணம் ஏதென்று யான் அறியேன் ஆம்
மண்ணை விட்டு பறந்த மணாளன் மீண்டும் வருவான்
திண்ணமாய் நீ நம்பு திடமாய் இருந்திடு
கடல் கடந்து பணி செய்ய கருதியே அவன் சென்றான்
உடல் நோக உழைப்பதெல்லாம் உனக்காக என்றெண்ணி
மடல் நோக்கி மாதவம் செய்யும் மங்கையே நீ
திடமாய் இருந்திடு திரும்புவான் ஒரு நன்னாளில்
நொடிப்பொழுதில் திரும்புவேன் என்றது நொண்டிச் சாக்கல்ல
கடிதே வருவான் அவன் கனவுடன் காத்திரு
வடிவுடை வண்ணமே வாயிலைப் பார்த்திடு நீ
குடியிருக்கும் கோயில் அன்றோ குணக்குன்றாம் உன் கணவன்
கைப்பேசி தன்னில் காலமேல்லாம் பேசிடுவாய்
ஐப்பசி நன்னாளில் அறுதியிட்டு வந்திடுவான்
புரட்டாசி மாதமே புதுப் புனலாய் நீ மிளிர்வாய்
பேசி மகிழ்ந்திடுவாய் நேசமிகு கணவனுடன்!!!
ம