சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகைய்யர் ஸ்ரீ ராமபிரான் மீது அதீத பக்தி கொண்டவர் ஆவார் என்பது எல்லோரும் அறிந்ததே..
இசையுடன் கலந்த இன்ப வாழ்வில் இவர் ஈடுபட்டார்… காஞ்சிபுரத்தில் இருந்து இராமகிருஷ்ண யதீந்திரர் எனும் மகான் இவரிடம் இராம நாமத்தை 96 கோடி முறை செபிக்கும் படி கூறிச் சென்றார்.. இவர் அதனை தெய்வ வாக்காக ஏற்று தினமும் 125000 முறை இராம நாமத்தை ஜெபித்து 21 ஆண்டுகளில் அதனை பூர்த்தி செய்தார்.! இதனால் இவருக்கு பலமுறை இராம தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது..ஆம் முக்கிய சந்தர்ப்பங்களில் ஏலநீதயராது (அடாணா ராகம்)என்ற கீர்த்தனையும், கனுகொண்டின( பிலஹரி ராகம்) என்ற கீர்த்தனைகளை முள் இயற்றினார்..

இவர் இளமையிலேயே சீதா, இராம, லக்ஷ்மணன் விக்ரஹங்களை வைத்து பூஜை செய்வதும் இராம நாமத்தை ஜெபிப்பதும் தன் வழக்கமாக கொண்டிருந்தார்.!
ஒருமுறை ஸ்ரீ ராமபிரான் சீதை மற்றும் அனுமனுடன் தியாகைய்யர் இல்லம் தேடி மாறுவேடத்தில்வந்தனர்..தாம் வெளியூரில் இருந்து வருவதாகவும் ஒரு இரவு தங்க இடம் கிட்டுமா என்று கேட்க தியாகைய்யர் அவர்களை ஆசனத்தில் அமர செய்தார்.. ஆனால் அவர்களுக்கு தருவதற்கு ஒரு பிடி அன்னம் கூட இல்லை.. வந்தவருக்கு என்ன தருவது என்று கையைப் பிசைந்து கொண்டே இருந்தபோது சீதை தாம் கொண்டு வந்த பழம் உணவுப் பொருட்களை தியாகைய்யரின் மனைவியிடம் கொடுத்தார்.! அந்த உணவு தயாரிக்கப் பட்டு வீட்டில் இருந்த ஸ்ரீ ராமபிரானுக்கு அர்பணித்து பின் அனைவரும் உண்டனர்..ராஜவெகுமதியை மறுத்ததால் உஞ்சவிருத்தியும் குறைந்திருந்தது.. அப்போது அனுமன் ” ஏனய்யா இப்படி எல்லாத்வெறுத்துட்டு அனாதையாக இருக்கே? அண்ணன் சொன்ன மாதிரி காசு சம்பாதிக்க வேண்டியது தானே” என்றார்.. அதற்கு ஸ்வாமிகள் பாடினார்
” சீதம்ம மாயம்மா ஸ்ரி ராயுடு மா தன்றி
வரதாத்மஜ சௌமித்ரி வைனதேய ரிபுமர்தண
தாத பரதடுலு சோத்ருலு மாக்கு ஓ மனசா
பரமேஷ வசிஷ்டா பராஷர நாரத
ஷௌனக சுக சுரபதி கௌதம
லம்போதர குஹ சனகாடுலு தரைஜ
பாகவதாக்ரேசருலு எவ்வரோ
வாரெல்லரு வர த்யாகராஜுனிகி பரம பாந்தவுலு மனஸா”
சீதம்மாதான் எங்க அம்மா, பிரபு ராமச்சந்திர மூர்த்தி தான் எனக்கு தந்தை, அனுமன் சௌமித்ரி கருடன் பரத சத்ருக்னன் ஆகியோர் நமக்கு சகோதரர்கள்.. பரமேசுவரன் வசிஷ்டர் பராசரர் இந்திரன் கௌதமர் விநாயகர் குகன் சனகாதியர் இவர்களெல்லாம் இந்த தியாகராஜனுக்கு நெருங்கிய சுற்றம்..இது ராமன் மீது பக்தி கொண்ட அனைவருக்கும் பொருந்தும்..

தியாகப் பிரம்மத்தின் திறனும் ஞானமும் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னருக்கு தெரிய வந்தது.. அவர் தியாகையாயரை அழைத்து தம்மைப் புகழ்ந்து பாடுமாறு கேட்டார்.. அதற்கு ஸ்வாமிகள் மறுத்து என் ராமருக்கு முன்னே பொன்னாவது பொருளாவது? அவரைத் தவிர மனிதர்களைப் பாட மாட்டேன் என்ற கருத்தில் நிதி சால சுகமா? ராமுனி சந்நிதி சேவகமா என்று கல்யாணி ராகத்தில் இவர் பாடிய பாடல் இன்றைக்கும் நம்மை மெய் மறக்க செய்யும்..
மன்னர் ஸ்வாமிகளுக்கு தெரியாமல் அவரது பிக்ஷை பாத்திரத்தில் சத்தமில்லாமல் பொற்காசுகளை இட ஒரு காசு மட்டும் தவறி கீழே உருண்டோடியது.. அதனைக் கண்ட ஸ்வாமிகள் தன் பிக்ஷை பாத்திரத்தில் இருந்த அரிசியுடன் எல்லா காசுகளையும் கீழே கொட்டினாராம்.. இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர் இரவோடு இரவாக ராமர் சீதை விக்ரஹங்களை எடுத்து சென்று ஆற்றில் வீசி விட்டார்..
அந்த நாள் பொழுதில் தியாகைய்யர் கனவில் ராமபிரான் தோன்றி ஆற்று மணலில் தாம் புதைந்து கிடப்பதாக தெரியப்படுத்தவும், மனதில் உற்சாகம் பொங்க மீதூர தொரிகிதுவோ ( நீ எப்படி மீண்டும் கிடைத்தாயோ) என்று பாடினார்..
பத்து நாட்களுக்கு முன்பே தாம் இராமனை அடையப் போவதாகக் கனவு கண்டார்..இதனை ” கிருபை நெல” என்ற கிருதியில் விவரித்தார்..
” தியாகப்ரும்மம்” என்று போற்றப்படும் ஸ்வாமிகள் தனது 80-வது வயதில் (1847) பகுள பஞ்சமி தினமொன்றிலா பஜனைகளைக் கேட்டவாறே முக்தி அடைந்தார்.. திருவையாறில் காவேரி நதியின் கரையில் பெங்களூர் நாகம்மா என்பவர் 1925ல் சமாதி ஒன்றை நிறுவினார்.. இன்றும் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பகுள பஞ்சமி தினத்தில் இசைக் கலைஞர்கள் கூடி இசையால் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்..

” ராம நாமம் அது வேதமே ராக தாளமோடு கீதமே”
Most valuable message
LikeLike