ஸ்கூலில் இருந்து அப்போது தான் உள்ளே நுழைந்தான் அந்த குழந்தை..உள்ளே அப்பா பெரியப்பா சித்தப்பா அத்தைகள் எல்லோரும் ஏதோ சத்தமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.. பாட்டி மெள்ள அவனைத் தன் ரூமுக்கு அழைத்து சென்றாள்..அவனது தாத்தா இறந்து இன்று சுபமெல்லாம் முடிந்து விட்டது.. ஹாலில் கொஞ்சம் கொஞ்சமாக சத்தங்கள் பெரிதாகிக் கொண்டே போயின..ஏதோ சண்டை என்று மட்டும் அவன் புரிந்து கொண்டான்.. பாட்டியிடம் மெல்ல கேட்டான்.. பாட்டி ஹாலில் என்ன சண்டை? அதற்கு பாட்டி ” ஒண்ணுமில்லை டா குழந்தே! தாத்தா போயிட்டாளோன்னோ இனிமே இந்த பாட்டிய யார் வச்சுக்கிறதுன்னு” என்றாள்.. அந்த குழந்தை கிடுகிடு என்று ஹாலுக்கு வந்தான்.. தன் அப்பாவிடம் ” கவலப் படாதேப்பா நீ செத்துட்டா அம்மாவ நான் வச்சுக்கறேன்..ஏன்னா? எனக்கு தான் அண்ணா தம்பி அக்கா தங்கை ன்னு யாரும் கிடையாதே” என்றான்.. ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை..