மணிகுண்டலன் கதை

நான் தான் கண்ணாடி தாத்தா.. குழந்தைகளே இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உங்களுக்கு நான் கதை சொல்வேன்..கேக்க ரெடியா இருங்க!!!

அடடா!!! வாங்க வாங்க கதை கேக்க வந்துட்டீங்களா!! இதோ ஒரு நிமிஷம்.. தாத்தா கண்ணாடி போட்டுண்டு வர்றேன்.. யார் யார் வந்திருக்கீங்க?? ஒ..நந்து, வெங்கட், அனிருத், மாயா, தாரா, சங்கீதா..அது யாரு புதுசா இருக்கு..?
அது தாத்தா இந்த ஃப்ளாட்டுக்கு புதசா குடி வந்திருக்கிற சாகேத்தும் அவன் தங்கை வ்ருந்தாவும்..
ஒஒஒ..ஒகே..ஒகே.. எல்லாரும் தள்ளி தள்ளி உக்காருங்க.. எல்லோரும் மாஸ்க் போட்டுண்டு இருக்கீங்களா?? கவர்ன்மென்ட் டிவில சொல்றா இல்ல? அது யாரு? வெங்கட், தாரா..நீங்க மாஸ்க் போட்டுக்கலயா? போய் போட்டுண்டு வாங்க.. நான் அது வரை வெயிட் பண்றேன்..போங்க. போங்க..
சரி .. குழந்தைகளா.. எல்லாரும் சாப்பிட்டாச்சா?..நந்து என்ன சாப்பிட்ட? ஒவ்வொத்தரா சொல்லுங்க
தோசை..
சப்பாத்தி
ரஸம் சாதம்.. தயிர் சாதம்..
பால் சாதம்..
ஓகே.. ஓகே.. குட்.. எல்லாரும் உங்க ஸ்கூல் ஹோம் ஒர்க் முடிச்சிட்டீங்களா? அதெல்லாம் முடிச்சிட்டு தான் இனிமே எங்கிட்ட கதை கேக்க வரணும்..புரிஞ்சுதா?
ஹும்..
ஓகே வெங்கட், தாரா வந்தாச்சு..இனி கதை சொல்லலாமா? உங்கள்ள எத்தனை பேருக்கு ராமாயணம் தெரியும்..? ராமரோட தம்பிகள் யாரு?
பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன்..
மகாபாரதம் தெரியுமா? பஞ்ச பாண்டவர்கள் யாரு?
தருமர், பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன்
வெரிகுட்..இதுல வர கதைகளை இன்னொரு நாள் சொல்றேன்.. இன்னிக்கு உங்களுக்கு வேற கதை சொல்லப் போறேன்.. இராமாயணம் மகாபாரதம் மாதிரி புராணங்கள் இருக்கு..அது பதினெட்டு இருக்கு.. எத்தனை இருக்கு?
பதினெட்டு..
வெரிகுட்..அதுல ஒண்ணு ப்ரும்ம புராணம்..இதுல சொன்ன ஒரு கதையை நான் உங்களுக்கு இப்ப சொல்லப் போறேன்.. ஓகேவா?
ஓகே..
வடநாட்டுல பாவ்னாங்கற ஒரு ஊர்ல கவுதமன், மணிகுண்டலன்னு ரெண்டு பேர் இருக்காங்க.. ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்..ஸ்கூல்லே ஒண்ணா படிச்சவங்க..இதுல கவுதமன் ஏழை..ஆனா ரொம்ப கெட்ட பையன்..மணிகுண்டலன் பணக்காரன் ஆனா ரொம்ப நல்லவன்..

ஒருநாள் கவுதமன் மணிகுண்டலன் கிட்ட வந்து நாம ரெண்டு பேரும் பிஸினஸ் பண்ணலாமான்னு கேட்டான்.. அதுக்கு மணி எங்கப்பா தான் நெறய பிஸினஸ் பண்ணி பணம் சேர்த்து வச்சிருக்காறே.. நான் எதுக்கு பண்ணனும்னு கேட்டான்.. அதுக்கு கவுதமன் இல்ல மணி ஒங்கப்பா செய்யறது தனி..நாம தனியே செய்யலாமான்னு கேட்டான்.. மணியும் ஒத்துகிட்டான்..மணி பணம் போட்டான்.. ரெண்டு பேரும் சேர்ந்து பிஸினஸ் பண்ணாங்க..நெறய பணம் கிடைச்சது.. மணி பாதி லாபத்தை பிரிச்சு கொடுத்தான்.. அதுக்கு கவுதமன் நான் தானே ஒழச்சேன்.. அதனால மொத்த பணமும் எனக்கு தான்னு கேட்டான்.. அதுக்கு சாட்சியா ரெண்டு மூணு பேரும் சொன்னாங்க.. மணி மொத்த பணத்தையும் கொடுத்தான்..
திரும்பவும் கவுதமன் மணிகிட்ட பேசி திரும்பவும் பிஸினஸ் பண்ணாங்க..இந்த தடவையும் கவுதமன் மொத்த பணத்தையும் எடுத்துகிட்டான்..அத்தோட இல்லாம மணிகுண்டலன் எங்கயாவது ராஜா கிட்ட போய் கம்ப்ளேயின்ட் பண்ணிடுவானோன்னு பயந்து மணிகுண்டலனோட கண்ணை பிடுங்கிட்டான்..மணியை அந்த ஊருக்கு வெளியே இருக்கற ஒரு கோயில்ல ஒக்காற வச்சுட்டு போயிட்டான்..மணிகுண்டலன் நாம ஏமாந்து போயிட்டோமேன்னு ரொம்ப ஃபீல் பண்ணான்..
அன்னைக்கு ராத்திரி அந்த கோயிலுக்கு ,..ராமாயணத்தில கேட்டு இருப்பீங்களே.. அந்த ராவணன் தம்பி விபீஷணன் வந்தான்.. அவன் கோயில்ல பூஜை பண்ணிட்டு வெளில வர்றப்ப நம்ம மணிகுண்டலன பாத்தான்.. அவன் கிட்ட எப்படி இப்படி ஆச்சுன்னு கேட்டான்..மணிகுண்டலன் நடந்தது எல்லாம் சொன்னான்..அத கேட்ட விபீஷணன் பக்கத்துல இருந்த ஒரு மூலிகை செடியில் இருந்து இலைகளை பறிச்சிகிட்டு வந்து சாறு பிழிந்சு அவன் கண்ணுல விட்டான்.. யார் கண்ணுல..?
மணிகுண்டலன் கண்ணுல..
குட் குட்…இப்ப மணிகுண்டலனுக்கு கண்ணு தெரிய ஆரம்பிச்சது.. மறுநாள் காலையில மணிகுண்டலன் மெள்ள எழுந்து பக்கத்து ஊருக்கு போனான்..அந்த நாட்டோட இளவரசிக்கு ஏதோ ஒடம்பு சரியில்லையாம்..எவ்வளவோ வைத்தியம் பாத்தும் குணமாகலயாம்.. அப்பதான் நம்ம மணிகுண்டலன போயி தனக்கு விபீஷணன் போட்ட மூலிகைய கொண்டு வந்து சாறு பிழிந்சு இளவரசிக்கு கொடுத்தான்.. அவளுக்கு உடனே ஒடம்பு குணமாயிடுச்சு.. அந்த ராஜாவும் ரொம்ப ரொம்ப சந்தோஷம்..அந்த இளவரசியை மணிகுண்டலனுக்கே கல்யாணம் பண்ணி கொடுத்தார்.. அந்த நாட்டையும் அவனுக்கே கொடுத்தார்..
இதுல இருந்து என்ன தெரியறதூ!? இது கூடா நட்புனால வந்தது..பேட் ஃப்ரண்ஷிப் .நாம ஜாக்கிரதையா ஃப்ரண்ஷிப் வச்சிக்கணும்..நம்ம ஸ்கூல்ல புதுசா யாராவது சாக்லேட் பிஸ்கட் வாங்கி குடுத்தா வாங்க கூடாது..
முக்கியமா என் பேத்தி பொண்களெல்லாம் ஸ்கூல்லே இருக்கற பியூன்,… வேன் டிரைவர் இவங்களெல்லாம் தொட்டு பேச விடக்கூடாது.. அப்படி அவங்க செஞ்சாங்களானா டீச்சர் கிட்டயோ ஒங்க அப்பா அம்மா கிட்டயோ சொல்லணும்.. புரிஞ்சுதா?
ஓகே.. இன்னைக்கு கதை அவ்வளவு தான்..அடுத்த ஞாயிற்றுக் கிழமை ராத்திரி வேற ஒரு கதை சொல்றேன்.. எல்லாரும் சமத்தா வீட்டுக்கு போய் தூங்கணும்.. அப்பதான் நாளைக்கு ஃரஷ்ஷா எந்திரிச்சு ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ணலாம்.. ஓகே குட்நைட்
குட்நைட்
Keep up your good work Sir. I also feel child-like while reading your emotional describe. Pranams தாத்தா.
LikeLike
Thanks.. please read other articles also and pass your valuable comments
LikeLike