சென்ற பதிவில் நான் சீக்ஷா முறை பற்றி சொல்லி இருந்தேன்.அடுத்து நாம் அறிந்து கொள்ள இருப்பது வியாகரணம். இது வேதங்களின் இரண்டாம் உறுப்பு..இந்த உறுப்பு இலக்கணத்தை வகுத்து அளிக்கிறது..இது வேதங்களின் வாய் என்று சொல்லலாம்.. பரம் பொருளின் ஸ்வரூபங்களில் மிக முக்கியமானது ஒலி வடிவே..சீக்ஷையும், வியாகரணமும் ஒலி வடிவை மேம்பட்ட தெளிவான வகையில் உணர முடிகிறது ..பாணினியின் அஷ்டத்யாயி எனும் வியாகரணமே இப்போது பரவலாக அறியப்படுகிறது..

நடராஜர் நடனம் செய்யும் போது, அவரது உடுக்கையிலிருந்து வெளிவந்த 14 சூத்திரங்களை கொண்டு பாணினி அவற்றை எட்டு அத்தியாயங்களில் எழுதினார்..இது 6 முதல் 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது..8 அத்தியாயங்களில் 4000 சூத்திரங்களை கொண்டது. சம்ஸ்கிருத மொழியின் உறுப்புகளையும் பிணைப்புகளையும் விவரிக்கும் நூலாகக் கருதப்படுகிறது.. பேசும் மொழி இலக்கணத்திற்கும் வேதத்தில் பயன்பாட்டிற்கும் வேறுபடுத்திக் காட்டுகிறது.. இந்த நூலுக்கு காத்யாயனர் ஒரு அமைப்பினை வகுத்தார்.. அதற்கு பதஞ்சலி முனிவர் மற்றும் பலராலும் விளக்க உரைகள் எழுதப்பட்டுள்ளன..
அடுத்து நாம் அறிந்து கொள்ள இருப்பது சந்தஸ்..
ஒவ்வொரு பரம அணுவிற்குள்ளும் அணுச்சலனம், அணுக்கருவிற்குள் நித்திய நித்தியம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.. பரம் பொருளின் திருநடனம் அதிர்வுகளின் காரணமாய் இந்த அண்டம் அணுக்களின் சலனமும் சப்தமும் உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது..அதிர்வே சப்தம்; சப்தத்தினால் சலனம்.. எப்படி ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தில் தட்டி சப்தம் எழுப்பினால் அந்த நீரில் சலனம் ஏற்படுகிறதோ:, அவ்வாறே, காற்றினில் நம் கைகளை வேகமாக அசைத்தால் சலனம் ஏற்படுகிறதோ; உதாரணமாக, பரவி இருக்கின்ற காற்றில் கை விசிறியினால் அசைக்க, அந்த காற்றானது சலனம் ஏற்பட்டு நமது சரீரத்தினைத் தீண்டுகின்றதோ, அது போல, அந்த சப்தமும், சலனமும் ஒலிகளை உண்டாக்குகின்றன.. இன்னமும் விவரமாக சொல்லப் போனால் மேகக் கூட்டங்கள் ஒன்றோடொன்று மோதும் போது தோன்றும் ஒளி மின்னலாகவும் ஒலி இடியாகவும் தோன்றுகிறதோ அதே போல; அந்த ஒலி வடிவே உயிர் வடிவங்களை உற்பத்தியாக்குகின்றன.. ஒலியின் வேறுபாட்டுக்குத் தக்கவாறு பரிணாமம் தோன்றியது..அப்பரிணாமங்களின் முழு வடிவமே பரம் பொருள்.. அந்த சப்தத்தின் கலைகளை முழுவதுமாக அறிந்தவர்கள் முனிவர்கள்..அப்படி அறிந்து கொண்டவைகளே வேதங்கள் ஆகும்.. இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒலி உள்ளது!!ஓடும் நதி, வீசும் காற்று, எரியும் நெருப்பு, ஆர்ப்பரிக்கும் கடல், பறவைகள், மிருகங்கள் இன்ன பிற.,
இயற்கையின் எல்லா ஒலி அலைகளின் இலக்கணங்களை அறிந்து அதைப் பிரதிபலிக்கும் வண்ணமாக 51எழுத்துக்களை வரிவடிவில் புகுத்தினர் முனிவர்கள்..
அவற்றுள் சிறந்த முதன்மை கலவை அ-உ-ம..ஓம் என்ற ஒலி.. இந்த பரந்த வான் வெளியில் “ஓம்” எனும் ஒலி ஒலித்துக் கொண்டே இருப்பதாய் அமெரிக்க விஞ்ஞானிகள் NASA அமைப்பின் மூலம் பதிவு செய்து கண்டறிந்துள்ளனர்..

அவ்வாறாயின் இந்த அண்டத்தின் படைப்புகளில் ஒவ்வொரு அலையிலும் இந்த ஓம் என்ற ஒலி ஊடுருவி நிற்பதாகும்…அந்த ஓம் எனும் அட்சரங்களை முதன்மையாகக் கொண்டு வேறொரு சக்தி மிக்கதாய் ஒரு மந்திரத்தை விஸ்வாமித்திர மகரிஷி 24 அட்சரங்களைக் கொண்டு ஒளிமிக்கதாய் உருவாக்கினார்..அந்த மந்திரமே காயத்ரி மந்திரம்
அத்தியாயம் 5
வேத சந்தஸ்கள்
வேத சந்தஸ்கள் ( Vedic Meter) இந்து சமய வேத மந்திரங்களில் எத்தனை பதங்கள் (அடிகள்) எத்தனை அட்சரங்கள்(எழுத்துக்கள்) இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கின்ற பகுதியே சந்தஸ் ஆகும். வடமொழியான சம்ஸ்க்ருதத்தில் பல சந்தஸ்கள் சொல்லப்பட்டு இருந்தாலும், ஏழு சந்தஸ்களே வழக்கில் உள்ளன..அவை:-
1) காயத்ரி சந்தஸ்
இதில் மூன்று பதங்கள்; ஒரு பதத்திற்கு எட்டு அட்சரங்கள் வீதம் மொத்தம் 24 அட்சரங்களைக் கொண்டது.
2) உஷ்ணிக் சந்தஸ்
இதில் நான்கு பதங்கள்; ஒவ்வொரு பததிற்கும் ஏழு அட்சரங்கள். மொத்தம் 28 அட்சரங்களைக் கொண்டது.
3) அனுஷ்டுப் சந்தஸ்
இதில் நான்கு பதங்கள் ; ஒவ்வொரு பதத்திற்கும் எட்டு அட்சரங்கள்.. மொத்தம் 32 அட்சரங்களைக் கொண்டது
4) ப்ருஹதி சந்தஸ்
இதில் நான்கு பதங்கள்.. ஒவ்வொரு பதங்களுக்கும் 8,12,8 அட்சரங்களுடன் மொத்தம் 36 அட்சரங்களைக் கொண்டது.
5) பஸ்கதி சந்தஸ்
நான்கு அல்லது ஐந்து பதங்கள்.. மொத்தம் 40 அட்சரங்களைக் கொண்டது
6) திருஷ்டுப் சந்தஸ்
நான்கு பதங்களுடன் ஒரு பதத்திற்கு 11 அட்சரங்கள் வீதம் 44 அட்சரங்களைக் கொண்டது
7) ஜகதி சந்தஸ்
நான்கு பதங்கள்.. ஒரு பதத்திற்கு 12 அட்சரங்கள் வீதம் 48 அட்சரங்களைக் கொண்டது..
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அனுஷ்டுப் சந்தஸே பயன்படுத்தப் பட்டுள்ளது..
அடுத்தது நிருக்தம்
நிருக்தம் என்பது சொல் இலக்கணம்.. வேதத்தின் நான்காவது உறுப்பு..இது வேதத்தின் செவியாகக் கருதப்படுகிறது..நிருக்தம் வேதத்தின் வேர்ச் சொல்லகராதி ஆகும்.. ஒவ்வொரு சொல்லின் வேரையும் கண்டெடுத்து கொடுக்கிறது..இது வேதத்தின் Dictionary, Wickypidia போன்றவை..வேத மொழியில் உள்ள கடினமானச் சொற்களுக்கு மூலம் மற்றும் பொருள் தருவதுடன், அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சொற்களையும் அசை பிரித்து அவற்றின் மூலப் பதங்களை விளக்கி, ஒவ்வொரு சொல்லும் ஏன் குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது..
இதற்கு அடுத்த உறுப்பு ஜோதிடம்
இது வேதங்களின் அடிப்படையிலேயே கோள்களின் நிலை கண்டு கணிக்கும் ஒரு அங்கமாகும்..இது பற்றிய விவரங்கள் கணக்கில் அடங்காது..இது அதர்வண வேதத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது..
இறுதியாக நாம் அறிந்து கொள்ள இருப்பது கல்பம்
இது வேதங்களின் அடிப்படையிலேயே செய்யப்படும் கிரியைகள் ( செய்முறைகள்) சடங்குகள் அதற்கேற்ற தந்திரம், யாகத்தின் விளக்கம், யாக சாலை அமைக்க வேண்டிய அளவு கோல்கள் (measurements) ஆகியவைகளை பற்றி விளக்குகிறது..
இதனை அடுத்து நாம் நான்கு வேதங்களான ரிக், யஜுர் சாம மற்றும் அதர்வண வேதங்கள் குறித்து பார்ப்போம்..
வளரும்…….