சென்ற பதிவுகளில் கௌரவர்கள் பக்கம் நின்று குருக்ஷேத்திரப் போரில் பங்கு கொண்ட சில நாடுகளின் மன்னர்கள் பற்றி பார்த்தோம்.. தற்போது மீதமுள்ள பல நாடுகளின் மன்னர்கள் பற்றி பார்ப்போம்..
ஆந்திரா
குரக்ஷேத்திரப் போரில் ஆந்திர நாட்டின் படை வீரர்கள் சிலர் பாண்டவர்கள் அணியிலும் சிலர் கௌரவர்கள் அணியிலும் இணைந்து போரிட்டனர்..
யவனர்கள்
மகாபாரதக் காவியத்தின் படி, பண்டைய பரதக் கண்டத்தின் மேற்கு, வடமேற்கு பகுதிகளான பாரசீகம், காப்போம், பாக்திரியா, சிந்து நாடு, மத்திர நாடு, கேகேய நாடுகளில் தங்கியிருந்த கிரேக்கர் போர் படைகளின் வழித்தோன்றல்களே யவனர்கள் ஆவர்.. யவனர்கள், சகர்கள், பகலவர்கள்,பரத நாட்டின் மக்களுடன் திருமண உறவுகள் மூலம் ஒன்றாகக் கலந்து விட்டனர்.. இப்போரில் இவர்கள் கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்..
சகர்கள்
சம்ஸ்கிருத மொழி அகராதிப் படி சகர் இன மக்களை மிலேச்சர்கள்( வெளி நாட்டினர்-foriegners) என்று அறியப்படுகிறது..பரதக் கண்டத்தைச் சாராத அயல் நாட்டவர்களை மிலேச்சர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது..குருக்ஷேத்திரப் போரில் சகர்கள், யவனர்கள், காம்போஸ் மன்னர் சுதட்சிணரின் தலைமையில் கௌரவர்கள் பக்கம் போரிட்டனர்..
கௌரவர்கள் அணியில் 24,45,700 படைவீரர்கள் போரிட்டனர்..
இதுவரை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் அணியில் இருந்து போரிட்ட சில மன்னர்கள் பற்றி அறிந்து கொண்டோம்.. ஆனால் இந்த மகாபாரத காவியத்தின் ஆணிவேராக இருந்து செயல் பட்ட ஒரு முக்கியமான நபர் பற்றி நாம் தெரிந்து கொள்ள வில்லை என்றால் இத்தொடர் துவக்கியதில் அர்த்தம் இல்லாமல் போகும்.. அதிலும் குறிப்பாக கி (ருஷ்ணருக்கு) முன்.கி.பின் என்று தலைப்பிடப்பட்டதற்கு சரியான காரணம் இல்லாமல் போகும்.. ஆம்! நாம் அடுத்து அறியப்போகும் காவிய நாயகன்.. ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி தான்.. ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி விஷ்ணு புராணத்திலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் நிறைய அறிந்து இருக்கிறோம்.. இருப்பினும் நாம் அவரைப் பற்றி சிறு குறிப்புகள் பார்க்கலாம்..

விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மம் மேலோங்கி நிற்கும் போதெல்லாம் அவதாரம் எடுப்பேன் என்று சொல்லி உள்ளார்..
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
– என கீதையில் மொழிகிறான் கண்ணன்.
பகவான் கிருஷ்ணர்
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.
ஆம். அதற்காகவே இறைவனின் அவதாரங்கள் நிகழ்கின்றன. அவதாரம் என்றால் இறங்கி வருவது என்பது பொருள். தீயவர்களை ஒழித்து பக்தர்களைக் காப்பதற்காக பரம்பொருளான இறைவன் அவதாரமேற்று வருகிறான்
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த வரலாறு மற்றும் அவரது முன்னோர்கள் பற்றி தற்போது பார்ப்போம்..
சந்திரகுலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது..பிரகஸ்பதியின் மனைவி தாரை.. இவள் சந்திரனுடன் ஔ கூடி புதன் எனும் மகனைப் பெற்றார்..வைவஸ்வத மனுவின் மகன் இளன்.. இவர் வேட்டையாடப் சென்ற போது ஒரு காட்டினை அடைந்தான்..அக்காட்டினிற்கு எவர் வந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறுவார் எனச் சாபம் உள்ளது.. அதன்படி இளன், ” இளை” என்று பெண் ஆனார்.. அந்த இளையை புதன் மணந்து அவர்களுக்கு பிறந்தவன் புருவரன்..
மற்ற விவரங்களை அடுத்து பார்ப்போம்..
நாளை சந்திப்போம்