சென்ற பதிவில் கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்ட மன்னர்கள் பற்றி பார்த்து கொண்டு இருந்தோம்.. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்ற அரசர்களைப் பற்றி பார்க்கலாம்..
நிஷாதர்கள்
நிஷாத நாடு என்பது ஆர்வத்தில் தொடரில் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டது..நிஷாத மக்களில் புகழ் பெற்றவர்கள் வால்மீகி, குகன் நளன் மற்றும் ஏகலைவன் ஆகியோர் ஆகும்..

இவர்களில் ஏகலைவன் ஆட்சி செய்த நிஷாத நாடு அன்றி தென்னிந்தியாவில் மற்றும் மத்திய இந்தியாவில் பல நிஷாத இன மக்கள் இருந்துள்ளனர்.! ஏகலைவன் மத்திய இந்தியாவின் பில் பழங்குடி இனத்தைச் சார்ந்தவன் என்று மகாபாரதம் தெரிவிக்கிறது..

குருக்ஷேத்திரப் போரில் நிஷாத இனப் படைகளில் தென்னிந்திய நிஷாதர்கள் பாண்டவர்களுக்காகவும், வட இந்திய நிஷாதர்கள் கௌரவர்களுக்காகவும் போரிட்டனர்..
திரிகர்த்த நாடு
இந்நாடு தற்கால பஞ்சாபில் உள்ளது.. இதன் தலைநகரம் பிரஸ்தலம் எனப்படும் முல்தான் ஆகும்.. இதன் மன்னன் சுகர்மன்.. மகாபாரதத்தில் இரண்டு திரிகர்த்த நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.. மேற்கு திரிகர்த்த நாடு தற்கால பஞ்சாபிலும், வடக்கு திரிகர்த்த நாடு இமாசலப் பிரதேசத்தின் காங்கிரா பகுதியிலும் இருந்ததாகக் கூறப்படுகிறது.. இவர்கள் போரில் கௌரவர்களுக்கு ஆதரவாக போரிட்டனர்.. போரில் அர்ஜூனனை திசை திருப்ப இவர்கள் விராட தேசத்தினை நோக்கி படைகளைத் திருப்ப அர்ஜூனன் அவர்களுடன் போரிட்டு கொன்றான்..அதே நேரத்தில் குருக்ஷேத்திர பூமியில் அபிமன்யுவை கௌரவர்கள் கொன்றார்கள்.!
காம்போஜர்கள்
இந்நாடு காந்தார தேசத்திற்கு அருகே அமைந்துள்ளது..

தற்கால கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காம்போஜ நாட்டினர் குதிரை வளர்ப்பு கலையில் வல்லவர்கள். எனவே இவர்களை அஸ்வகர்கள் என்றும் அழைப்பர்.. இவர்களும் கௌரவ அணியில் இருந்து போரிட்டனர்..
அவந்தி
தற்கால மால்வா பகுதியே வேதகால அவந்தியாகும்.. அவந்தி நாட்டின் வடக்கு பகுதியில் உஜ்ஜைனி நகரமும் தெற்கு பகுதியில் மகிழ்மதி நகரமும் இருந்தன.. மகாபாரதத்தில் அவந்தி மக்களை மிகவும் சக்தி மிக்கவர்களாகக் கூறப்படுகிறது..
கேகேச நாடு
இந்நாடு தற்கால ஆப்கானித்தானின் வடக்கே கசகஸ்தானில் அமைந்துள்ளது.. இராமாயண காவியத்தில் தசரதனின் இரண்டாவது மனைவியும் பரதனின் தாயுமான கைகேயியும் கேகேய நாட்டின் இளவரசி ஆவார்.. ஒரு ஒற்றுமை பாருங்கள்.. இரண்டு காவியங்களிலும் முக்கிய பங்கு வகத்தவர்கள் பாரத நாட்டின் வடமேற்குப் பகுதியில் இருந்து வந்தவர்கள் தான்.. பின்னர் ஏற்பட்ட இஸ்லாமிய படையெடுப்பும் வடமேற்குப் பகுதியில் இருந்து தான்.. பரதன் காந்தார நாட்டினை வென்று தக்ஷசீலா எனும் நகரினை நிர்மாணித்தான்..குருக்ஷேத்திரப் போரில் பாண்டவர்கள் அணி சார்பாக ஐந்து கேகேய இளவரசர்களும், அவர்களின் பங்காளிகளாக நூறு கேகேய இளவரசர்கள் கௌரவர்கள் சார்பாகவும் போரிட்டதாக மகாபாரதம் கூறுகிறது..
கலிங்கம்
இந்நாடு வடக்கு தெற்காக சுவர்ண ரேகா நதியிலிருந்து கோதாவரி கரை வரையிலும், கிழக்கு மேற்காக வங்காள விரிகுடாவில் இருந்து அமர்கந்தாக் மலைத்தொடர் வரையிலும் பரந்திருந்தது.. இதன் தலைநகரம் தந்தபுரம் மற்றும் இராஜபுரம் என்று இரு தலைநகரங்கள் இருந்ததாகக் மகாபாரதம் குறிப்பிடுகிறது..அங்க நாடு (கிழக்கு பீகார்) வங்க நாடு (தெற்கு வங்காளம்) பௌண்டர நாடு ( மேற்கு வங்காளம்) மற்றும் சுக்மா நாடு ( வடமேற்கு வங்காளம்) ஆகிய நாட்டு மன்னர்களே பொதுவான முன்னோர்கள் ஆவார்..குரு நாட்டின் இளவரசன் துரியோதனன் மனைவி பானுமதி கலிங்க நாட்டின் மன்னன் சித்ராங்கதனின் மகள் ஆவார்.குருக்ஷேத்திரப் போரில் கலிங்க நாட்டின் மன்னன் சுருதயுதன் அவனது இளவரசன் சக்கர தேவன் ஆகியோர் கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டு பீமனால் கொல்லப்பட்டனர்..
மற்ற மன்னர்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
நாளை சந்திப்போம்