கடந்த மார்ச் மாதம் சேலம் சென்றிருந்த போது இந்த அருமையான இயற்கை சூழல் பின்னணியில் அமைந்திருந்த இத்திருக்கோயிலை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது..



இங்கு மயில் மேல் அமர்ந்து முருகப்பெருமான் மூலவராக காட்சி தருகிறார்.. இந்த கோயில் சுமார் 1000-2000 வருட பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.. இந்த திருக்கோயில் சேலம் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் சீலநாயகன் பட்டியில் ஊத்துமலை எனும் மலை மேல் அமைந்துள்ளது..
இந்த மூலவர் தவிர சுவர்ண விநாயகர் அகஸ்தீஸ்வரர் சதாசிவர் நவகிரகங்கள் சன்னதிகளும் உள்ளன.. விநாயகர் முருகப்பெருமான் இடது புறமும் சதாசிவர் லிங்க வடிவில் நந்தி ரோடு வலது புறமும் உள்ளார்.
தமிழ் தொண்டாற்றிய அகத்திய மாமுனிவர் பொதிகைக்கு வந்து தாமிரபரணி ஆற்றினை உருவாக்கினார்.. அவர் பக்கத்தில் இருந்த நீர்வீழ்ச்சி அருகில் இருந்த முருகப்பெருமான் கோயிலில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது..சில காலங்கள் கழித்து அந்த கோயில் அகத்தியர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.. ஆராய்ச்சியாளர்கள் இந்த கோயிலில் அமர்ந்து தமிழ் இலக்கண நூலான அகத்தியம் என்னும் நூலை இங்கு தான் இயற்றியதாகக் கூறப்படுகிறது..
இந்த மலையில் உள்ள குகைககள் ஜைனர்கள் இங்கு இருந்து உள்ளனர் என்றும் தெரிகிறது.. இருப்பினும் அகத்திய மாமுனிவர் இங்கு வந்து தரிசனம் செய்தார் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன..
43 முக்கோணங்கள் கொண்ட ஸ்ரீ சக்கரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது..ரிஷிபத்தினிக்கு ஒரு குடிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.. அகத்திய மாமுனிவர் ஒரு மரத்தடியில் புலித்தோல் மீதமர்ந்து தவம் செய்யும் சிலையும் உள்ளது..கபில முனிவர் குகை இங்கு இருந்ததற்கு ஆதாரமாக சிலை வைக்கப்பட்டுள்ளது..
இந்த கோவிலின் ஸ்தலபுராணத்தின்படி சப்தரிஷிகள் அதிகாலையில் இங்கு வந்து இங்குள்ள நீரூற்றினில் ஸ்நானம் செய்வதாகவும், குறிப்பாக அமாவாசை அன்று கூடிய சிவராத்திரி வேளைகளில் ஸ்நானம் செய்து சதாசிவனை பூஜை செய்வதாக கூறப்படுகிறது.. கொங்கு மண்டல சதகம், மற்றும் பாபநாச புராணத்தின் ஓலைச்சுவடிகளில் சிவசித்தர், கஞ்சமலைச் சித்தர், கரடிச் சித்தர், பழனி போகர் இங்கு வாழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது..சுக முனிவர் கிளி வடிவிலும் கண்வ முனிவரும் இங்கு தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது..
இந்த கோவிலின் தலவிருட்சம் வில்வம்..
பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஸ்கந்த ஷஷ்டி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன..
அகத்திய முனிவர் தமது பொதிகைப் பயணத்தின் போது இந்த கோவிலில் உள்ள பால முருகனைத் தரிசித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது..