
சென்ற பதிவில் சூரிய அஸ்தமனம் இரண்டு முறை நிகழ சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது.. இதற்கு டாக்டர் வார்டெக் என்பவர் எழுதிய நூலில் விடை உள்ளது.. சூரிய ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்தாலும் அது வளி மண்டலத்தைக் கடக்கும் போது ஒளிச் சிதறலுக்கு உள்ளாகிறது.. இதுவே தொடுவானத்திற்குக் கீழே சூரியன் இருப்பது போல காட்சி தருகிறது.. கானல் நீர் ( Mirrage) போல சூரியன் நிஜ வானத்தில் மறைந்து ஒரு மாயத் தொடுவானம் காட்சி அளிக்கிறது.. போரின் போது பயன்படுத்தப்பட்ட பல நெருப்பு ஆயுதங்களால் யுத்த பூமி சூடாகி அதன் மேலான காற்று அடர்த்தி குறைவாகி எழும்பி இருக்க மாலைச் சூரியனின் வட்ட வடிவம் மாய நீள் வட்டமாகி மாயத்தொடுவானத்தின் கீழ் சூரியன் மறைந்தது போல தோற்றம் உருவாகி இருக்கும்..ஜெயத்ரதன் வெளியே வந்த நேரம் வெப்ப வேறுபாடு குறைய நிஜத்தொடுவானத்தில் சூரியன் தோற்றமளிக்க ஜயத்ரதன் வதம் நிகழ்ந்துள்ளது..
உலூகன்
இவன் காந்தார மன்னன் சகுனியின் மகன்.. போரின் போது எட்டாம் நாளன்று அபிமன்யு மற்றும் சகாதேவனால் கொல்லப்பட்டான்
சல்லியன்
இவன் மத்ஸ்ய தேசத்தின் மன்னன்.. இவனது சகோதரி மாதுரி பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆவாள்..அஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள் அரண்மனை என நினைத்து துரியோதனனை சந்திக்கிறார்.. அவனது உச்சரிப்பில் மனம் மகிழ்ந்த இருந்த வேளையில் உபசரித்தவருக்கு எந்த உதவியும் செய்வதாக வாக்களிக்கின்றான்.. அப்போதுதான் துரியோதனன் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டு கௌரவர்கள் சேனைக்கு ஆதரவு அளிக்க கோருகிறார்.. தனது தவற்றினை உணர்ந்த சல்லியன் தருமரிடம் மன்னிப்பு கோருகிறார்..

தருமர் சல்லியனின் தேரோட்டும் திறன் கண்டு கர்ணனுக்கு சாரதியாக இருக்கும் வாய்ப்பு உண்டானால் கர்ணனின் மனவலிமை குன்றச் செய்யுமாறு வேண்டினான்..சல்லியனும் அதனை ஏற்றுக் கொண்டான்.. போரில் கர்ணனின் பலத்தை அவ்வப்போது இகழ்ந்து பேசினான்.. ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர் சக்கரம் மண்ணில் புதைய அதனை மேலே கொண்டு வர எம்முயற்சியும் எடுக்காமல் அவ்விடத்தை விட்டு அகன்றான்.. கர்ணன் இறந்த பிறகு இறுதி நாளில் கௌரவ படைகளூக்கு சேனாதிபதியாகி சண்டையிட்டு சகாதேவனால் கொல்லப்பட்டான்..
பார்பரிகன்
இந்துப் புராணங்களில் இவன் பீமனின் மகன் கடோத்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவன் என்று கூறப்படுகிறது..யட்சனான பார்பரிகன் மனிதனாக மறுபிறவி எடுத்தான்.. இவன் பாண்டவர்கள் பக்கம் போரிட விரும்பினாலும் தோற்கும் அணிக்கே தனது ஆதரவு என்கிற கொள்கையினால் கௌரவர்கள் பக்கம் நின்று போரிடுகிறான்.. இராஜஸ்தானில் பர்பரிகன் போரில் தமது தாத்தாக்களான பாண்டவர்கள் வெற்றிக்காக பலி கொடுக்கப் பட்டான் என்று நம்பப்படுகிறது

இந்த செய்கையால் ஸ்ரீ கிருஷ்ணர் இவனை தெய்வமாக்குகிறார். இராஜஸ்தானில் பர்பரிகன் கதுஷ்யாம்ஜி என்ற பெயரில் வழிபாடு செய்ய படுகிறார்.
பாக்லிகர்
இவ சந்தனு மகாராஜாவின் இளைய சகோதரர்.. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களூக்கு முப்பாட்டன் ஆவார்.. இவர் திருதிராஷ்டிரனின் ஆலோசகரும் ஆவார்.. இவர் போரில் கௌரவர்கள் பக்கம் நின்று போர் புரிந்து பீமனால் மாண்டார்..
பகதத்தன்
இவன் ஸ்ரீ ஆதிவராக மூர்த்திக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவனாகக் கூறப்படுகிறான்..இந்திரனுடன் அரக்கர்கள் யுத்தத்தில் ஈடுபட்டபோது இவன் அரக்கர்கள்களைத் தோற்கடித்து இந்திரனுடன் நட்புரிமை கொண்டான்..இவனது நகரம் பிரக்ஜோதிசம்.. இது இன்றைய கௌஹாத்தி நகரம் ஆகும்.. இவன் மூப்பு காரணமாக நெற்றியின் மடிப்புகள் கீழே தொங்கிக் கண்களை மறைத்தது.அதனால் துணியால் அதனைத் தூக்கி கட்டிக் கொண்டு போரிட்டான்…குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தான்.. இவ்விடத்தில் சுப்ரதீகம் எனும் யானை இருந்தது..இது பலம் பொருந்தியது.. இது போரில் பாண்டவர்கள் படைகளை மிதித்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

பகதத்தன் விடுவித்த பல சக்தி வாய்ந்த ஆயுதங்களை கண்ணன் தன் மார்பினில் தாங்கி அர்ஜூனனைக் காத்தான்.. அர்ஜுனனும் கண்ணனும் தங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தித்தான் பகதத்தனை அழிக்க முடிந்தது..
கௌரவர்கள் பக்கம் இன்னும் நிசாதர்கள், திரிகர்த்தர்கள்,காம்போஜர்கள் போன்ற பல நாட்டு மன்னர்கள் போர் புரிந்து உள்ளனர்.! அவர்களைப் பற்றி அடுத்து பார்ப்போம்
நாளை சந்திப்போம்