நான் கடந்த ஜனவரி மாதம் மீஞ்சூர் ரயில் மூலம் சென்று இருந்தேன்.. அமைதியான சூழலில் பெருமாள் கோயிலைக் கண்டேன்..இளங்காலை நேரம்.. எனது அனுபவத்தை இங்கே பதிவு செய்கிறேன்




சென்னை கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையம் உள்ளது..பொன்னேரியிலிருந்து 5 கி.மீ சாலை மார்க்கமாக சென்றால் மேலூர் சக்தி ஸ்தலமும் தேவதானம் திருமால் தலமும் உள்ளது..
சுமார் 400 ஆண்டுகள் பழமையான கோயில்..வட காஞ்சி என அழைக்கப்படுகிறது.. இந்த கோயிலின் பல பதிவேடுகள் மைசூரில் உள்ளதாக கூறப்படுகிறது..மௌண்சரண்யம் எனும் புனிதப் புல் வகை இங்கு வளர்ந்த வண்ணம் உள்ளது.. அதுவே பின்னர் மருவி மீஞ்சூர் என்று ஆனது..
கிழக்கு திருமுக மண்டலம்..நின்ற திருக்கோலம்.. தாயார் ஸ்ரீ பெருந்தேவித் தாயார்..
வைகாசி பிரம்மோற்சவம் விசேஷம்..கருட சேவையும் நடைபெறுகிறது.. புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள்.. இந்தப் பகுதியில் தேரோடு விளங்கும் ஒரே பெருமாள் கோயில் இதுவாகும்..
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 07.00-11.00
மாலை. 05.00-08.00