
கூடிய ஊர் இழுத்து ஓடிய தேர் இன்று
கொடிய நோய் தாக்கம் நிலையில் நின்றதே
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே சூழ்நிலை தான் மாறாதோ நேமி நெடியவனிடம் நீ பரிந்து பேசாயோ
ஆலயத்தின் உள்ளேயே பொற்றேர் ஏறி
வலம் வந்த அரங்கனும் ஆண்டாளும் இன்று
கலக்கம் கொண்ட மாந்தருக்கு கனிமுகத்தைக் காட்டாயோ
என்ன பாவம் செய்தோம் யாம் இந்நிலை காண
என்ன செய்தால் தீரும் இந்த நிலை மாற
சொன்னால் தெரியும் சொல்ல வல்லார் யாருளர் அந் நல்லாரைத் தேடி நாளும் தொழுகின்றோம்