மகாபாரதத்தில் கௌரவர்களில் கிடைத்த நல்முத்து யுயூத்ஸூ..
காந்தாரி கர்ப்பம் தரித்திருந்த காலத்தில் அவள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கர்ப்பம் தரிக்க குழந்தை வெளியே வராமல் இருந்தது.. இந்நிலையில் பாண்டுவின் மனைவி குந்திக்கு பாண்டவர்களில் யுதிஷ்டிரன் பிறந்தான் என்று செய்தி கேள்விப்பட்ட திருதிராஷ்டிரன் பல வகையான மனக்குழப்பத்தினாலும் பொறாமையாலும் ஆவேசம் அடைந்தான்..காந்தாரியை பல வகைகளிலும் சொற்களால் துன்பப் படுத்தினான்..அவனது ஆவேசத்தின் உச்ச கட்டமாக காந்தாரியின் தாதி சுகதா மூலம் வாரிசு பெற முயன்று வெற்றியும் பெற்றான்.. கர்ப்பம் தரித்த சுகதா காந்தாரி மக்கள் ஈன்ற அதே தருணத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றாள்..அம்மகவே யுயூத்சு ஆகும்.. அவனது மற்ற பெயர்கள் தர்தராஷ்டிரா கௌரவ்யா மற்றும் வைஷ்ய புத்ரா என்பன ஆகும்..
இவன் கௌரவர்களில் குணத்தால் சிறந்தவன் ஆவான்.. இவன் தர்ம நெறிமுறை கற்றரிந்தவன்.. மிகச்சிறந்த வீரன்..குருக்ஷேத்திரப் போரினில் பாண்டவர்கள் பக்கம் இருந்து போரில் பங்கு கொண்டவன்.. போரின் முடிவில் உயிர் துறக்காத பதினோரு வீரர்களில் இவனும் ஒருவன்..
கலியுகத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் இருந்து வைகுந்தம் சென்ற பின் பாண்டவர்களும் இம் மண்ணுலக வாழ்வை துறக்க தீர்மானித்து அபிமன்யு வின் புத்திரன் பரிக்ஷித்தினை அரசனாக முடி சூட்டினர்.. நாட்டின் பாதுகாப்பு கருதி யுயூத்சுவை அந்நாட்டின் பாதுகாவலனாக நியமித்தனர்..
யுயூத்சுவின் முடிவு பற்றி ஏதும் ஆதாரங்கள் இல்லை.. ஆயினும் காந்தாரி தமது அனைத்து மக்களும் கொல்லப்பட பாண்டவர்கள் காரணம் என்று ஆவேசம் கொண்டு இந்நாள் வரை கட்டி இருந்த கண் கட்டினை அவிழ்த்து பாண்டவர்களை தமது கண்களால் எரிக்க முயன்றதாகவும் அம்முயற்சி யில் உயிருடன் இருந்த ஒரே மகனான யுயூத்சு பலியானான் என்று ஒரு கருத்து நிலவுகிறது..இதற்கும் ஆதாரங்கள் இல்லை..
இராமாயணத்தில் விபீஷணன் தர்மத்தின் பக்கம் நிற்கின்றது போல மகாபாரதத்தில் யுயூத்ஸு பாண்டவர்கள் பக்கம் நின்று தர்மத்தை நிலைநாட்டினான்..எனவே யுயூத்ஸுவும் ஒரு விபீஷணனே..