

சென்ற மார்ச் மாதம் கரூர் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண ப்ரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் சென்று இருந்தேன்..
காவிரியின் கரையில் அமைந்துள்ளது இந்த கோயில்.. இங்கு காவிரி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது..இக்காவிரியில் நீராடி பெருமாளை துதித்தால் நற்கதி கிட்டும் என்பது நம்பிக்கை.. உற்சவர் ஸ்ரீ நிவாஸர்..தல விருட்சம் வில்வம்.. தீர்த்தம் காவிரி.. ஆகமம் வைகானஸம்.. இவ்வூரின் புராணப் பெயர் மோகினியூர்..
பெருமாள் இக்கோயிலில் அர்த்த நாரீஸ்வரர் போல ருக்மணியுடன் இணைந்து சம்மோகன கிருஷ்ணர் ஆக காட்சி தருகிறார்..இது ஒரு ரகசிய அவதாரமாகும்..
புரட்டாசி மாதம் சனிக்கிழமை மற்றும் திருவோண நட்சத்திரம் நாட்களில் கருடசேவை தந்து அருள் பாலிக்கிறார்..
இக்கோயில் சேவை நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை; மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை..
வாசகர்கள் கரூருக்கோ நாமக்கல் ஆஞ்சநேயர் சேவிக்க செல்லும் போது அவசியம் இந்த கோயிலை தரிசனம் செய்யலாம்..