
கடந்த 2018ல் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டாரன்ஸ் எனும் இடத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் சென்று தரிசனம் செய்தேன்.. இக்கோயில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 35 மைல் தூரத்தில் உள்ளது.. கோவில் முகப்பில் கோபுரம் ஏதும் இல்லை.. ஒரு சதுர வடிவ கட்டிடத்தின் அமைப்பில் உள்ளது.. ஒரு பெரிய அரங்கம் (ஹால்).. அதில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி, சிவன், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், ஸ்ரீ நிவாஸர், பத்மாவதி தாயார், நவக்கிரக சன்னதியும் உள்ளன.. ஸ்ரீ ஆஞ்சநேயர் சுமார் பதினைந்து அடி உயரம் உள்ளார்.. விசேஷ நாட்களில் பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன..
ஜெய் ஸ்ரீராம்