நாம் பொதுவாக நம் பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் சொல்வதுண்டு. பண்பாடும் கலாச்சாரம் இரண்டும் ஒன்றுதானா? அல்லது வேறு வேறா? பண்பாடு என்றால் என்ன கலாச்சாரம் என்றால் என்ன?
இவை பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களை யும்; அத்தகைய செயற்பாடுகளுக்கு சிறப்புத் தன்மைகளையும் முக்கிய த்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புகளையும் குறிக்கின்றது.? பண்பாடு ஒரு பல முனை கொண்ட பொருள். அதற்குப் பல வரையறை கள் உண்டு.. மொழி உணவு இசை சமய நம்பிக்கைகள் தொழில் சார்ந்த கருவிகள் பண்பாட்டுக் அடங்கும்..
பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைக ளை க்குறிக்கிறது.. ஆனால் பண்பாட்டின் வெவ்வெறு இலக்கணங்கள் மனிதச் செயற்பாடுகளை விளங்கிக் கொள்ள அல்லது அவற்றை மதிப்பிட அளவுகோலாக உள்ளது..1952எல் அல்பிரட் எல் குரோ பேர் என்பாரும் கிலாய்டு குளுகோனும் பண்பாடு என்பதற்கு 200க்கும் மேற்பட்ட இலக்கணங்களை கூறியுள்ளனர்..ஆக இவ்விரண்டும் பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய பொருள் ஆகும்..
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் மேலை நாட்டு அறிஞர் களும் இன்றைய அறிஞர்களும் பண்பாடு என்பதை நாகரீகம். (civilization) என்பதாக அடையாளம் கண்டு அதனை இயற்கைக்கு எதிரான ஒன்றாக கருதுகிறார்கள்..19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியல் அறிஞர்கள் பல்வேறு சமூகங்களுக்கும் பயன்பட தக்க வகையில் பண்பாடு என்பதற்கு பரந்த வரைவிலக்கணம் ஒன்றினை வகுத்தார்கள்..
இவற்றில் பண்பாடு என்பதை விளங்கிக்கொள்ளும் இன்னொரு பொதுவான மூன்று மூலங்களை உள்ளடக்கியது..அவை பெறுமானம் (எண்ணங்கள்) நெறிமுறைகள் ( நடத்தை) மற்றும் பொருட்கள் (அல்லது பொருள் சார் பண்பாடு). முதல் இரண்டும் வாசகர்களுக்கு புரியும்.. மூன்றாவதாக குறிப்பிட்ட பொருள் சார் பண்பாடு என்றால் (material culture) என்பது மக்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றத்துக்கு உள்ளக்கபட்ட பொருட்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த பல்வேறு ஆய்வுகள் ஆகும்.
வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே ‘ பெறுமானம்’ ஆகும்.. அவை பண்பாட்டின் மற்ற அம்சங்களை வழி நடத்துகிறது. ‘ நெறிமுறைகள்’ என்பன வெவ்வெறு நேரங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும்.? இந்த நெறிமுறைகள் தான் சட்டங்கள் என பொதுவாக வழங்கப்படுகின்றன..
ஆக கலாச்சாரம் பண்பாடு என்பது ஒரு பொதுவான பொருளையே குறிக்கின்றன என்பது புலனாகிறது.. இனி ஒவ்வொரு நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் வழிமுறைகளை தனித்தனியே அடுத்து பார்ப்போம்
தொடரும்