பாண்டு வனவாசத்தில் இருந்தபோது இந்திரன், வாயு, எமன் முதலான தேவர்கள் மூலமாக குந்திக்கு அர்ஜுனன், பீமன், மற்றும் யுதிஷ்டிரனும் பாண்டுவின் மற்றோரு மனைவி மாத்ரிக்கு அஸ்வினி தேவர்கள் மூலமாக நகுலன் சகாதேவன் ஆகியோர் பிறக்கின்றனர்.. பாண்டு வனத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மாண்டு போக குந்தி பாண்டவர்களுடன் அஸ்தினாபுரம் வருகிறாள்.

அதேபோல திருதிராஷ்டிரன் காந்தாரி இணையருக்கு துரியோதனன் மற்றும் 99 புதல்வர்கள் ஆகியோரும் துத்சலை எனும் புதல்வியும் பிறக்கிறார்கள்.. இவர்கள் அனைவரும் குரு துரோணரிடம் கல்வி மற்றும் அஸ்திர வித்தைகள் பயின்றனர்.. குருகுலத்தில் இருந்த போதே இருவர் களுக்குள் உள்ளே விரோதம் வளர்ந்து வந்தது.. குருகுல வாசம் முடிந்து அனைவரும் வாலிப வயதில் அஸ்தினாபுரம் திரும்பினர்..யுவராஜ் பட்டம் கட்டுவதில் போட்டி நிலவியது.. முடிவில் யுதிஷ்டிரனுக்கு யுவராஜ பட்டம் கட்டப் பட்டது.. இதனால் துரியோதனன் மனதில் பொறாமை தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.. அதற்கு ஏற்றார்போல அவனது மாமன் சகுனி தூண்டும் வகையில் நடந்து கொண்டான்..
ஒருநாள் பாண்டவர்களுக்கு வாரணாவதம் எனுமிடத்தில் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல குந்திக்கு அழைப்பு வந்தது.. அவர்களுக்கு அங்கே அரக்கு மற்றும் எரியும் பொருட்களாலான மாளிகை கட்டி அவர்கள் தங்க சகுனி ஏற்பாடு செய்தான்.. அந்த மாளிகை தீக்கிரையான போது விதுரரின் உதவியால் தப்பி வனம் செல்கின்றனர்.. அங்கே பீமன் இடும்பன் எனும் அரக்கனை அழித்து அவனது தங்கை இடும்பியை மணந்து கொள்கிறான்.. அவர்களுக்கு கடோத்கஜன் பிறக்கிறான்..அவர்களை வனத்திலேயே விட்டுவிட்டு பாஞ்சாலம் செல்கின்றனர்.. அங்கே ஸ்வயம்வரத்தில் திரௌபதியை அர்ஜுனன் மாலையிடுகிறான்.. குந்தியின் தவறுதலான ஆணையினால் பாண்டவர்கள் அனைவரும் திரௌபதியை மணந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.. அதன் பின்னர் அவர்கள் அனைவரும் அஸ்தினாபுரம் வந்தனர்.. மீண்டும் இராஜ்யாபிஷேகப் பிரச்சினை ஏற்பட்டது.. இதற்கு ஒரு சுமூகமான தீர்வு காண பீஷ்மர் மற்றும் விதுரர் ஆகியோர் திருதிராஷ்டினனுக்கு அறிவுரை கூற அவனோ பாண்டவர்களுக்கு காண்டவப்பிரஸ்தம் எனும் காட்டுப் பகுதியில் இடம் வழங்கினான்.. அந்த இடத்தை பாண்டவர்கள் அழித்து அசுர சிற்பியான மயனின் உதவியுடன் நகரம் நிர்மாணித்து அதற்கு இந்திரப்ரஸ்தம் என்று பெயரிட்டு ஆண்டு வந்தனர்..
யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் நடத்தி தனது ஆட்சிமையை நிலை நாட்டிக் கொண்டான்.. அந்த இராஜ சுய யாகத்தில் பங்கு கொள்ள வந்த துரியோதனன் மற்றும் கர்ணன் சகுனி அங்கே ஒரு விரும்பத்தகாத சூழல் ஏற்படக் காரணம் ஆயினர்..இதனை மனதில் கொண்டு சகுனியின் ஆலோசனைப்படி திருதிராஷ்டிரன் பாண்டவர்களை விருந்திற்கு அஸ்தினாபுரம் அழைத்தான்..விருந்தின் முடிவில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டம் நடைபெற்றது..

சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் தன் நாடு, செல்வங்கள் தனது தம்பியர் நால்வரையும் வைத்து இழக்கிறான்.. அதன் உச்சகட்டமாக தங்களது மனைவி திரௌபதியையும் பணயமாக வைத்து தோற்றதினால் துச்சாதனனை அழைத்து திரௌபதியை இழுத்து வர துரியோதனன் ஆணையிடுகிறான்..அவளது சேலையை அரங்கத்தில் அவிழ்த்து விடவும் ஆணையிடுகிறான்.

அங்கே ஸ்ரீ கிருஷ்ணர் மறைமுக மாக அவளின் மானம் காத்தார்
முடிவில் பாண்டவர்கள் யாவரும் பனிரெண்டு ஆண்டுகள் வனவாசமும் ஒரு ஆண்டு மறைந்திருந்து வாழவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.. அதன்படியே அவர்கள் அனைவரும் வனவாசம் செய்கின்றனர்..இனி அடுத்த நிகழ்வுகளை அடுத்து பார்ப்போம்.
நாளை சந்திப்போம்