

வந்தவாசியிலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கோயில் அருள்மிகு எதிராஜவல்லி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்..
நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திருமுக மண்டலத்தில் சேவை சாதிக்கிறார்..
மாதப் பிறப்பு, இராமானுசர் திருநக்ஷத்திரம், பங்குனியில் வருடாந்திர பிரம்மோற்சவம், வைகாசி விசாகம் கருடசேவை, புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விசேஷ உற்சவம் நடைபெறுகிறது.. மார்கழி மாதம் கூடாரவல்லி அன்று சிறப்பாக நடைபெறுகிறது.. தேசிங்கு ராஜா வினால் பூஜிக்கப்பட்ட பழமை வாய்ந்த தலம்.. தேசிங்கு ராஜாவின் பெயரிலிருந்து தான் இந்த ஊர் தேசூர் என்று பெயர் பெற்றது என்று தகவல்..