சந்திர வம்சம்
சந்திர குலம் தோன்றியது குறித்து ஒரு கதை சொல்லப்படுகிறது.. பிரகஸ்பதி யின் மனைவி தாரை.. இவள் சந்திரனுடன் கூடி புதன் எனும் மகனைப் பெற்றாள்..வைவஸ்வத மனுவின் மகன் இளன்.. இவன் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது ஒரு காட்டினை அடைந்தான்.. அந்த காட்டில் யார் வந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறுவார் எனச் சாபமுள்ளது.. அதன்படி இளன் ” இளை” என்று பெண் ஆனான்.. அந்த இளையைப் புதன் மணந்து அவர்களுக்கு பிறந்தவன் புருவரன்..
ஒருமுறை தேவமகளிர் நதியில் நீராடி கொண்டு இருந்த போது அவர்களின் அழகில் சிறந்த ஊர்வபசியை கேசி என்பவன் கவர்ந்து சென்றான்.. மகளிரின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வந்த புருவரன் ஊர்வசியை மீட்டு இந்திரனிடம் ஒப்படைத்தான்.. தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியை புருவரனுக்கே தந்து விட்டான். சிறிது காலம் அவனோடு வாழ்ந்த ஊர்வசி இந்திரலோகம் திரும்பினாள்..புருஷனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவன் ஆயு எனப்படுவான்.. அவன் வழித்தோன்றல்களே சந்திர வம்சம் ஆகும்..ஆயுவின் புதல்வன் நகுஷன் ஆகும்.. இவனது மனைவி அசோக சுந்தரி என்றும் இவள் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவள் என்று பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது.. இவர்களுக்கு யயாதி மற்றும் நூறு பெண்கள் பிறந்தனர்..
யயாதி மற்றும் சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி ஆகிய இருவருக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் என்றும் இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோன்றல்கள் சேர், சோழ, பாண்டியர்கள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.. இவர்களில் ஒரு பிரிவினர் ஒழுக்கம் குன்றி அரேபிய தேசம் அடைந்து யவனர்கள் ஆயினர் என்றும், யயாதிக்கும் சர்மிஷ்ட்டைக்கும் பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யூவின் வழித்தோன்றல்கள் போஜர்கள் என்றும், நான்காவது மகன் அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்றும் ஐந்தாவது மகன் புருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்..
இவற்றில் தமிழகத்திற்கு கடல் வழியாக மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த கிரேக்கர்களையும் பின்னர் ரோமானியர்களையும் யவனர்கள் என்று சங்க நூல்களில் குறிப்பிடுகின்றனர்.. அவர்களின் மரக்கலங்களில் தலைவனுக்கு பாதுகாப்புக்காக வந்த யவனர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டனர்.. இவர்களில் சிலர் தமிழ் அரசர்களுக்கு மெய்காப்பாளராகவும் தங்கி விட்டனர்.. இவர்கள் ஊமையர்கள்..
புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள், கௌரவர்கள் ஆவார்கள்..புருவிற்குப் பிறகு 25 தலைமுறைகளுக்கு பிறகு பிறந்தவர் மன்னர் குரு..குரு மன்னரின் வழித்தோன்றல்களில் குறிப்பிடத் தக்கவர்கள் துஷ்யந்தன், பரதன், சந்தனு ஆகியோர் ஆவர்
சந்தனு விற்கும் கங்கைக்கும் பிறந்தவர் தேவவ்ருதன்..

பின்னாளில் அவரே பீஷ்மர் என்று அழைக்கப்பட்டார்..சந்தனுவின் மற்றொரு மனைவியான சத்தியவதிக்குப் பிறந்த சித்ராங்கதன் மற்றும் விசித்திர வீரியன்.. ஆகியோர் இருமகன்கள்.. இவர்களில் சித்ராங்கதன் ஒரு போரில் இறந்து போனான்.. அதனால் விசித்திர வீரியன் அரியணை ஏறினான்..இவனுக்காக பீஷ்மர் காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா, மற்றும் அம்பாலிகா ஆகியோரை ஸ்வயம்வரத்தில் வென்று கொண்டு வந்தார்.. ஆனால் இதில் அம்பை வேறு ஒரு அரசனைக் காதலித்ததால் அம்பிகா மற்றும் அம்பாலிகா ஆகியோரை விசித்திர வீரியனுக்கு மணம் முடித்து வைத்தார்.. ஆனால் மணம் முடித்த சில நாட்களிலேயே விசித்திர வீரியன் இறந்து போனான்.. வாரிசு இல்லாமல் ராஜ்ஜியம் தடுமாற சத்தியவதியின் ஆலோசனையின்படி அவளது மற்றொரு மகனான வியாச முனிவர் நியோகி முறைப்படி அம்பிகா மற்றும் அம்பாலிகா ஆகியோருக்கு திருதிராஷ்ட்டிரன், பாண்டு என்ற புதல்வர்களையும், தாதி ஒருவள் மூலமாக விதுரர் என்ற புதல்வனையும் பெற்றெடுக்க வழிவகுத்தார்..
இவர்களில் திருதிராஷ்ட்டிரன் கண் பார்வை இல்லாத காரணத்தால் பாண்டு அரியணை ஏறினான்.. சிறிது காலம் சென்று பாண்டு வனவாசம் செல்கிறான்.. அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகளை அடுத்து பார்ப்போம்..



One thought on “கி.மு…..கி.பி (பதிவு அத்தியாயம் 10)”