கி.மு…..கி.பி (பதிவு அத்தியாயம் 9)

மகாபாரதம் வேதவியாசர் சொல்ல விநாயகர் எழுதியதாகக் கூறப்படுகிறது.. விநாயகரை வேதவியாசர் தான் சொல்வதனை எழுதியருளுமாறு வேண்ட விநாயகர் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார் என்றும் அந்த நிபந்தனை யாதெனில் தான் நிறுத்தாமல் எழுதுவதாகவும் வியாசர் தொடர்ந்து சொல்லி கொண்டே இருக்கவேண்டும் என்றும்;..வியாசரும் தொடர்ந்து சொன்னார்; வாக்கியங்களிடையே நேரம் சேகரிக்க ஏதுவாக கடினமான சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தார் என்றும் சிலர் கூறுவர்.. மகாபாரதம் வியாசரால் இயற்றப்பட்டபோது 8000 அடிகள் மட்டிலுமே இருந்தது..

வைசம்பாயனர்

  1. வைசம்பாயனர் என்பார் மிகவும் புகழ் பெற்ற இந்திய முனிவர்.. இவர் யசுர் வேதத்தைக் கற்பித்தவர் எனப்படுகின்றது. இவர் ஜெயம் என்ற தலைப்பில் 8,800 அடிகளுடன் கூடிய தொடக்ககால மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் சீடர் என்றும் நம்பப்படுகின்றது. வைசம்பாயனர் தனது குரு எழுதிய ஜெயம் எனும் மகாபாரதத்தை 24,000 அடிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தி சனமேசயன் என்னும் அரசனுக்குக் நாக வேள்வியின் போது எடுத்துரைத்தார். அவ்வமயம் வைசம்பாயனர் எடுத்டுரைத்த மகாபாரதக் கதையை கேட்ட உக்கிரசிரவஸ் என்ற சூத முனிவர், பின்னாளில் சௌனகர் தலைமையிலான நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்
  1. . ஜெயம் என்ற இதிகாசம் பின்னாளில் பாரதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அரிவம்சம் என்னும் புராணத்தை இவரே இயற்றியதாகத் தெரிகிறது
  2. மகாபாரதம் 18 பருவங்களைக் கொண்டது..அவை:
  3. .ஆதி பருவம்
  4. : 19 துணைப் பருவங்களைக்) கொண்டது.நைசாரண்யம் எனும் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச்
  5. சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப்பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன.
  6. சபா பருவம்:
  7. 9 துணைப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப்பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில்அடங்குகின்றன.
  8. ஆரண்யக பருவம்:
    16 துணைப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
  9. விராட பருவம்:
    4 துணைப் பருவங்களைக் கொண்ட இப் பருவம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில்
    வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
  10. உத்யோக பருவம்:
    11 துணைப் பருவங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற
    போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
  11. பீஷ்ம பருவம்:
    இது 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது.
    கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
    பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
  12. துரோண பருவம்:
    8 துணைப் பர்வங்களில், துரோணரின்
    தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த
    பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில்
    இறந்துவிடுகின்றனர்.
  13. கர்ண பருவம்:
    73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
  14. சல்லிய பருவம்:
    4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில்
    கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில்
    துரியோதனனுக்கும் , வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.
  15. சௌப்திக பருவம்:
    3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும் , கிருபனும் கிருதவர்மனும் , போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும்
    மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
  16. ஸ்திரீ பருவம்:
  17. 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப்பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த
    பெண்கள் துயரப்படுவது கூறப்படுகின்றது.
  18. சாந்தி பருவம்:
    மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல் , அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
  19. அனுசாசன பருவம் :
    89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது.
    பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
  20. அசுவமேத பருவம்:
    தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது.
  21. ஆசிரமவாசிக பருவம் :
    3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன.
    திருதராட்டிரன் , காந்தாரி , குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரஸ்தம் ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
  22. மௌசல பருவம்:
    96 ஆவது துணைப்பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப்பர்வம் கூறுகிறது.
  23. மகாபிரஸ்தானிக பருவம்:
    97ஆவது பர்வம்: தருமரும்அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும்பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச்சென்றது, அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப்பர்வத்தில் இடம்பெறுகின்றன.
  24. சுவர்க்காரோகண பருவம்:
    98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன. 99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள்
    அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில்
    கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.

வியாசர் எழுதிய பாரதம் 8000 அடிகளாகவும், பின்னர் வைசம்பாயனரால் ஒதப்பட்டபோது 24000 அடிகளாகவும், அதனை உக்கிரசிரவரஸ் நைமிசாரண்ய முனிவர்களுக்கு ஓதியபோது 90000 அடிகளாகவும் விரிவடைந்தது.. இதற்கு காரணம் கதைக்குள் கதை சொல்லும் முறையில் இயற்றப்பட்டதாகும்..24000 அடிகள் இருந்தபோது பாரதம் என்று அழைக்கப்பட்டு பின்னர் விரிவடைந்தபோது மகாபாரதம் என்று அழைக்கப்படுகிறது.. அநேகமாக பாரதம் நிகழ்ந்த காலகட்டத்தில் பல்வேறு சமகால நிகழ்வுகளையும் இப்பாரத புராணத்தில் இணைத்து இதன் விரிவாக்கம் நேர்ந்திருக்கலாம். எவ்வாறாயினும், பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு ஒரு இணையில்லா இதிகாசம் படைக்கப்பட்டுள்ளது..

ஆதியில் வியாசரால் எழுதப்பட்ட மூல வடிவம் கி.மு 9-8 நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கக் கூடும் என்றும் பின்னர் வைசம்பாயனரும், உக்கிர சிரவஸும் இதனை விரிவாக்கம் செய்தபோது கி.மு 4ஆம் நூற்றாண்டாக இருந்திருக்கக்கூடும்.. என்பதும் பாணினி யின் அட்டாத்தியாயக எனும் இலக்கண நூலிலும் அசுவலாயன கிரக சூத்திரம் எனும் நூலிலும் காணப்படுகின்றன..

சந்திர வம்சம் மற்றும் குருவம்சத்தில் நேர்ந்த நிகழ்வுகளை அடுத்து பார்ப்போம்

நாளை சந்திப்போம்

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: