


நான் கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மேலிபு என்கிற இடத்தில் உள்ள ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சென்று இருந்தேன்..
இக்கோயில் காலிபாஸஸ் நகரில் சான்டா மோனிகா மலைமீது உள்ளது.. இக்கோயில் தென்னிந்திய கலாச்சார முறையில் 1981ல் கட்டப்பட்டது..
இந்த கோயில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது..மேலடுக்கில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோயில் உள்ளது.. பிரகாரத்தில் நான்கு சன்னதிகள் நான்கு மூலையிலும் தனித்தனியாக உள்ளது.. பத்மாவதி தாயார், ஆண்டாள், இராமர், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.
.கீழ் அடுக்கில் அருள்மிகு சிவன் கோயில்.. இங்கே சன்னதியில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதியும் உள்ளன.. உலகின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய தென்னிந்திய கோயில் ஆகும்..