கி.மு…….கி.பி (பதிவு அத்தியாயம் 8)

ரகுவம்சத்தின் முடிவு

    இராம லக்ஷ்மணர்கள் இராவணனைக் கொன்று சீதையை சிறை மீட்டு அயோத்தி திரும்பினர்.. இராமர் பட்டாபிஷேகம் நடை பெற்றது என்று சென்ற பதிவில் பார்த்தோம்.. அதன் பின்னர் இராமர் பல ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக புராணங்கள் கூறுகின்றன..உத்தர ராமாயணத்தில் ராமரின் பிந்தைய ஆட்சி நிகழ்வுகளின் விவரம் அளிக்க பட்டுள்ளன.. ஒரு நாள் கருவுற்றிருந்த சீதையை சூழ்நிலை பழி காரணமாக ராமர் காட்டிற்கு அனுப்புகிறார்.. அங்கே அவள் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.. அவளுக்கு. குசன், லவன் என்கிற இரட்டை குழந்தைகள் பிறந்தனர்..

   இராமர் தமது இரட்டை குழந்தைகள் குசன் லவன் ஆகியோரிடம் ஆட்சியை வழங்கி விட்டு தமது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும் காலம் வந்தது.. ராமர், அவரது சகோதரர்கள் மற்றும் அவரிடம் அதீத அன்பு கொண்டோர் அனைவரும் சரயூ நதியில் மூழ்கி தமது மண்ணுலக வாழ்வைத் துறந்ததாக புராணங்கள் கூறுகின்றன..

   இராமர் நிர்மாணித்த லவபுரி என்கிற நகரத்தின் ஆட்சியாளராக லவன் இருந்தான். இந்த லவபுரி தற்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்று வழங்கப்படுகிறது..குசன் கசூர் எனப்படும் நகரினை ஆண்டான்.. இது லாகூருக்கு தென் கிழக்கில் உள்ளது.. ஆனந்த இராமாயணத்தில் வவன், ஸ்ராவஷ்டி என்கிற நகரினையும், குசன் குஷாவதி என்கிற நகரினையும் ஆண்டதாகச் சொல்லப் படுகிறது..இவ்விரண்டுமே உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.. ஸ்ரீ மத் பாகவதத்தின்படி குசனுக்குப் பிறகு எட்டு தலைமுறைகள் ஆண்டு இறுதியாக பிரகத்பாலன் என்பவருடன் ரகுவம்சம் அழிந்ததாகத் தெரிகின்றது..பிரகத்பாலன் குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டு அபிமன்யுவால் கொல்லப்படுகிறான்..ஆக, இராமாயண காலம் கி.மு. 5100ல் துவங்கி கி.மு. 3137ல் முடிவடைந்துள்ளதாக அறியப்படுகிறது.. இந்த சமயத்தில் தான் சிந்து சமவெளி நாகரிகம் வளர்ந்துள்ளதாகத் தெரிகிறது..

மகாபாரத நிகழ்வுகளின் சுருக்கம்

மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட்ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.

நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டுதிருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.

இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.[1]

மகாபாரத காவியத்தில் வசிஷ்டரின் மகனாகப் பிறந்தவர் சக்தி மகரிஷி.. இவர் வசிஷ்டரூக்கும் அருந்ததிக்கும் பிறந்தவர்.. இவர் அடர்ந்த மலைக் காட்டின் வழியாகச் செல்லுகையில் இஷ்வாகு குல மன்னர் கல்மாஷபாதன் என்பவனால் துன்புறுத்தப் படுகிறார்.. அவர் அவனை நரமாமிசம் உண்ணும் அரக்கனாக மாறும்படி சாபமிட்டார்.. அப்போது அங்கே வந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டருக்கு பாதகம் செய்ய வேண்டி அவரது மகன் சக்தி மகரிஷியை அழிக்க கல்மாஷபாதன் உடலில் ஒரு கிங்கரனை ஏவினார்.. அவன் முனிவர் சக்தியை கொன்று நரமாமிசம் உண்டான்.. சக்தி முனிவர் இறந்த போது அவரது மனைவி அத்ரிசியந்தி கர்ப்பவதியாக இருந்தாள்.. சக்தி மகரிஷி இறந்த பின்னர் தான் அவருடைய மனைவிக்கு பராசர மகரிஷி பிறந்தார்.. இவருக்கும் சத்தியவதிக்கும் பிறந்தவரே வேதவியாசர்.. விஷ்ணு புராணத்தின் மூல ஆசிரியரும் இவரே ஆவார்..

சத்தியவதியின் இயற்பெயர் மச்சகந்தி.. இவள் தாசன் எனும் மீனவனின் வளர்ப்பு மகள்.. இவளது அழகில் மயங்கிய பராசர மகரிஷி இவள் உடலில் வீசிய மீன் வாடையைப் போக்கி நறுமணம் வீசச் செய்தார்..அவளது பெயரையும் சத்தியவதி என்று மாற்றினார்..

கங்கை ஆற்றின் ஒரு தீவுத்திட்டில் கருத்த மேனியுடன் பிறந்ததால் வியாசருக்கு கிருஷ்ண த்வைபாயனர் என்று பெயர்..

சந்திர வம்சம்

சந்திர வம்சம் தோன்றியது குறித்து ஒரு கதை சொல்லப்படுகிறது.. பிரகஸ்பதி யின் மனைவி தாரை.. இவள் சந்திரனுடன் கூடி புதன் எனும் மகனைப் பெற்றாள். வைவஸ்வத மனுவின் மகன் இளன்.. இவன் வேட்டையாடச் சென்றபோது ஒரு காட்டினை அடைந்தான்..அக்காட்டினிற்கு எவர் வந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறுவார் எனச் சாபமுள்ளது.. அதன்படி இளன் ” இளை” என்று ஆனான்.. அந்த இளையை புதன் மணந்து கொண்டார்.. அவர்களுக்கு பிறந்தவன் புருவரன்..

இவருக்கு பின்னர் தோன்றியதே சந்திர வம்சம்.. அதன் வழித்தோன்றல்களே குருவம்சத்தினர். அவர்களைப் பற்றி அடுத்து பார்ப்போம்..

நாளை சந்திப்போம்

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: