கி.மு…..கி.பி (பதிவு அத்தியாயம் 7)

இராம காவியம்

அயோத்தியை ஆண்ட மன்னன் தசரதன் கோசல நாடு ( தற்கால உத்தரப் பிரதேசம்) அயோத்தி யில் நேமியில் பிறந்தான்.. இவரது தந்தை அஜன், தாயார் இந்துமதி ஆகியோர்.. தசரதன் மூன்று பெண்களை மணந்து கொண்டார்.. முதல் மனைவி கோசல நாட்டின் (தற்போதைய ஒடிசா) இளவரசி கௌசல்யா.. இரண்டாம் மனைவி கேகேய நாட்டின் (தற்போதைய தஜிகிஸ்தான்) மன்னர் அஸ்வபதியின் மகள் கைகேயி.. மூன்றாவது மனைவி காசி நாட்டின் இளவரசி சுமித்திரை ஆகும்.. கௌசல்யாவிற்குப் பிறந்த மகள் சாந்தாவை அங்க நாட்டு மன்னர் ருஷ்ய ஸ்ருங்கருக்கு மணம் செய்வித்தனர்.. பின்னர் தசரதனுக்கு மகன்கள் யாரும் இல்லாத காரணத்தால் ருஷ்ய ஸ்ருங்கர் ” புத்திர காமேஷ்ட்டி’ யாகம் செய்து தசரதனுக்கு கௌசல்யா மூலம் ஸ்ரீ ராமனும், கைகேயி மூலம் பரதனும், சுமித்திரை மூலம் இலக்ஷ்மணன் சத்ருக்னன் ஆகிய இரு குழந்தைகளையும் பெற்றனர்..

அவர்கள் நால்வரும் அயோத்தியில் வளர்ந்து குரு வஸிஷ்டரிடம் கல்வி பயின்றனர்..ஒரு நாள் விஸ்வாமித்திரர் அயோத்தி வந்து தாம் செய்யும் வேள்வியை கரன் தூஷணன் ஆகிய அரக்கர்கள் தடை செய்வதாகவும் அதனைக் காப்பாற்ற ராம லக்ஷ்மணர்களை அனுப்பி வைக்க கேட்டு அவர்களை வனத்திற்கு அழைத்து சென்றார்.. அங்கே அரக்கர்களை மாய்த்து, தாடகையை வதம் செய்தனர் ராம லக்ஷ்மணர்கள்.. பின்னர் அகலிகைக்கும் சபரிக்கும் அருள் பாலித்து மிதிலை சென்றனர்.

அங்கே ஜனக மன்னர் வைத்த ஸ்வயம்வரத்தில் கலந்து கொண்டு சிவதனுசை முறித்து சீதையை மணம் புரிந்தார் ராமர்.. பின்னர் சிறிது காலம் அயோத்தியில் இளவரசனாக இருந்தார்.. ஒருநாள் கைகேயியின் பணிப்பெண் மந்தரை போதனை செய்ததால் கைகேயி இராமர் வனவாசம் போக தசரதனிடம் கேட்டு அனுப்பி வைத்தாள்.

ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் பிரச்சினை பாரதத்தின் வடமேற்கு பகுதியில் இருந்து தான் வந்துள்ளன..கேகேய நாட்டின் கைகேயி, காந்தாரத்தின் சகுனி.. தற்போதும் நமக்கு வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானால் அவ்வப்போது பிரச்சினை..

இராமர், சீதை, மற்றும் இலக்ஷ்மணன் ஆகிய மூவரும் வனம் சென்றனர்.. வழியில் குகனுடன் நட்பு.. வனத்தில் இருந்தபோது ஒரு நாள் ராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமனைக் கண்டு மையல் கொண்டு தொந்தரவு செய்ய கோபம் கொண்ட லக்ஷ்மணன் அவளை மானபங்கம் செய்து விரட்டி விட்டார்.. அவள் தன் அண்ணனிடம் சென்று சீதையின் அழகைப் பற்றி சொல்லி ராவணனின் ஆவலைத் தூண்டுகிறாள்..அவளது பேச்சினால் மனம் மயங்கி சீதையை சிறை எடுக்க வனம் வந்தான்.. மாரீசன் மாயமான் வேடம் தரித்து ராம லக்ஷ்மணர்களை சீதையிடம் இருந்து பிரித்து வைத்தனர்.. பின்னர் சீதையை கவர்ந்து சென்றான் ராவணன்.. வழியில் ஜடாயுவுடன் சண்டையிட்டு அதனைக் கொன்றான்.. சீதையை இலங்கைக்கு கொண்டு சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான்.. சீதையைத் தேடி இராம லக்ஷ்மணர்கள் காடுகளில் திரிந்து கிஷ்கிந்தா வந்தடைந்தனர்..

அனுமனின் சுக்ரீவனுக்கு உதவும்படி வேண்ட வாலி வதம் நடை பெற்றது.. சுக்ரீவன் தனது வானர சேனையுடன் தெற்கு நோக்கி சென்று அங்கே தென் கிழக்கு கடற்கரையோரத்தில் ராமலக்ஷ்மணரும் அனுமன் சுக்ரீவன் ஆகியோர் சேனையுடன் முகாமிட்டனர்..

பல்வேறு திசைகளில் வானரங்கள் சீதையை தேடிச் சென்று இறுதியில் அனுமன் சீதை இலங்கையில் இராவணனால் சிறை பிடிக்க பட்டதை காண்கிறார்.அவளிடம் இராமர் கொடுத்த சூடாமணியைக கொடுத்து இராமர் விரைவில் சீதையை சிறை மீட்பார் என்று உறுதி அளித்தார்.

அதன் பின்னர் இராவணனிடம் தூது சென்று இலங்கையைத் தீக்கிறை ஆக்கி திரும்பினார்.. இராமர் கடல் கடந்து இலங்கை செல்ல வானரங்கள் பாலம் அமைத்தன.

அந்த பாலம் இன்றளவும் உள்ளது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்..

அதன் பின்னர் இராமர் இராவணனூடன் போர் நடந்தது.

போரின் முடிவில் இராவணனைக் கொன்று சீதையை சிறை மீட்டு அயோத்தி திரும்பினார்.. அவரது பட்டாபிஷேகம் நடை பெற்றது..

அவர் அதன் பின்னர் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.. ஆனால் அதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை..

இராமரின் பிற்கால ஆட்சியும் அவரது வழித்தோன்றல்கள் பற்றி அடுத்து பார்ப்போம்

நாளை சந்திப்போம்

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: