



இறைப் பயணம்
சென்ற ஆண்டு மார்கழி நாலாம் நாள் மாயவனை மாதவனை மாலவனைப் பணிந்து இறைப் பயணம் துவங்கினேன் நான் பயணித்து அனுபவித்த பல திருக்கோயில்களை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன். அன்பர்கள் பார்த்து மகிழுங்கள்.
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் – வந்தவாசி செல்லும் ரோட்டில் மெயின் ரோட்டில் இருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் வரக்கூடிய கிராமம் மேல்மா..
மேல்மா
மூலவர் கரிமாணிக்கப் பெருமாள்
உத்சவர் கல்யாண வெங்கடேசப் பெருமாள்
தாயார் கமலவல்லி
நின்ற திருக்கோலம்
கிழக்கு திருமுக மண்டலம்.
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் மேல்மா கூட்ரோடிலிருந்து 2 கி.மீ சென்றால் கோயிலை அடையலாம்.
இக்கோயில் சன்னதியில் அருகிலுள்ள மூன்று கிலமான திருக்கோயில்களில் அர்ச்சா மூர்த்திகளை இங்கே ப்ரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
குரும்பூர்–லஷ்மி நாராயணன்
தேத்துரை–கரிமாணிக்க வரதர்
நூத்தம்பாடி– இராஜகோபாலன்
2000 வருட பழமையான கோயில். இரண்டாம் குலோத்துங்கன் கட்டியது.
ஒரு கால பூஜை. பட்டர் வீடு அருகில் உள்ளது.
சேவார்த்திகளுக்கு சேவை அருள வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் நிலை.
ஆனால் சேவார்த்திகளைத் தான் காணவில்லை என்று பட்டர் கூறுகிறார்