
வால்மீகி ராமாயணம் கி.மூ 5ஆம் நூற்றாண்டிற்கும் 2 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நூலினைத் தழுவி பல இந்திய மொழிகளிலும், பிற அயல்நாட்டு மொழிகளிலும் இயற்றப்பட்டுள்ளது.. அவைகளை கிழே பார்ப்போம்..
இந்திய மொழிகளில் இராமாயணம்:
- கம்ப இராமாயணம். தமிழ்
- துளசி தாசர். ஹிந்தி
- எழத்தச்சன். மலையாளம்
- மாதவ் சங்குனி. அசாமி
- பல்ராம்தாசு. ஒரியா
- மொள்ள ராமாயணம். தெலுங்கு
வடமொழி இராமாயண நூல்கள்:
- யோகவசிஷ்ட(அ) வசிஷ்ட இராமாயணம் ( கி.பி. 8 அல்லது 12ம் நூற்றாண்டு)
- அத்யாத்ம இராமாயணம் (கி.பி 13ம் நூற்றாண்டு) இராமதாசர் எழுதியது
- அற்புத இராமாயணம்
- ஆனந்த இராமாயணம் (கி.பி.15ம் நூற்றாண்டு
அந்நிய மொழிகள்
- கெமர் மொழி (கம்போடியா) ரிம்கேர்
- தாய் மொழி. ராம கியான்
- லாவோ மொழி. ப்ரா லாக் ப்ரா லாம்
- மலாய் மொழி இக்காயத்சேரி ராமா
வால்மீகி இராமாயணம் ஏழு காண்டங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.. அவைகளின் சுருக்கம் அளித்துள்ளேன்
1.பால காண்டம்
இராமனினுடைய மற்றும் அவரது உடன் பிறந்தோரின் பிறப்பு, கல்வி, திருமணம் பற்றிய கதை
2.அயோத்தி காண்டம்
இராமர் சீதையை மணந்து கொண்ட பின்னர் அயோத்தியில் இளவரசனாக வாழ்ந்த பகுதி
3.ஆரண்ய காண்டம்
இராமர் காட்டிற்கு சென்றதும் அங்கு வாழ்ந்ததும்
4.கிஷ்கிந்தா காண்டம்
கடத்தி செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும் போது வானரர் நாட்டில் இராமர் வாழ்க்கை
5.சுந்தர காண்டம்
சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்கு சென்றது.. அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை விளக்கும் பகுதி.
6.யுத்த காண்டம்
இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய பகுதி
7.உத்தர காண்டம்
இராமர் அயோத்திக்கு திரும்ப வந்து அரசாண்ட தும் சீதையை மீண்டும் காட்டிற்கு அனுப்பப்பட்டதையும் விளக்கும் பகுதி.
இவற்றில் முதலும் இறுதியும் உள்ள காண்டங்கள் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதா என்கிற சில சந்தேகங்களும் சிலரால் எழுப்பப்படுகின்றன. அதன் காரணம்,இவ்விரு காண்டங்களின் மொழி நடை மற்ற ஐந்து காண்டங்களை விட மாறுபட்டு உள்ளதாகவும் அவற்றின் உள்ளடக்கங்களிலும் மாறுபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.. இருப்பினும் ஏழு காண்டங்களுமே ஸ்ரீ வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டது என்பதே பலரின் நம்பிக்கை..
இனி இவ்விதிகாசம் பற்றி சற்று விரிவாக அளிக்கிறேன்..
முன்னொரு காலத்தில் ரோமஹர்ஷணர் எனும் முனிவர் இருந்தார்.. இவர் நடக்கும் போது இவரது உடல் முழுவதும் உள்ள உரோமங்கள் (மயிர்கள்) குத்திட்டு நிற்கும் என்பதனால் இவருக்கு இப்பெயர் உண்டானது..இவரது மகன்தான் உக்கிரஸ்ரவஸ்..இவரே புராணங்கள் சொல்லும் பௌராணிகராக இருந்தார்..

சாஸ்ல்திரம் மற்றும் புராணங்களின் அடிப்படையில் மானுட வர்க்கம் சூரிய வம்சம் மற்றும் சந்திர வம்சம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. இவற்றில் சிவ பெருமானை அடிப்படையாகக் கொண்டு சூரிய வம்சம் அல்லது ரகுவம்சம் என்றும் திருமால் எனும் விஷ்ணுவை அடிப்படையாகக் கொண்டு சந்திர வம்சம் அல்லது யது வம்சம் என்றும் கூறப்படுகிறது..
தொன்மையான இரண்டு இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய இந்த இரண்டும் இவ்விரண்டு வம்சங்களின் அடிப்படையில் எழுந்தவைகளே ஆகும்.
சூரிய வம்சம்
சூரியன் மற்றும் சந்தியா தேவியின் வழித்தோன்றலில் வந்தவர் வைவஸ்வத மனு என்பவர்
இவருக்கும் ஷ்ரத்தா தேவிக்கும் பத்து குழந்தைகள் பிறந்தனர்.. இவற்றில் ஒரேயொரு பெண்குழந்தை இலா எனப்படுவாள்..இவர்களே பின்னர் சூரிய வம்சம் மற்றும் சந்திர வம்சத்தினர் என்று கிளைத்தனர்.. மகாபாரதத்தின்படி வைவஸ்வத மனுவின் பெயரால் மனுஷன் என்று ஆணையும் மனுஷி என்று பெண்ணையும் வழக்கத்தில் அழைக்கப்படுகிறது..வைவஸ்வத மனுவிற்கு வேணன், திருஷ்ணு,நரிஷியன்,நபாகன்,இஷ்வாகு,கருஷன்,சர்யாதி, பிருஷாத்திரு,நபாரிஷ்டகன், ஆகிய ஆண் மக்களும் மற்றும் இலா பெண்ணும் பிறந்தன.. ஆண் குழந்தைகள் ஷத்திரியராக இருந்து அரசாண்டனர்..இலா சந்திரனின் புதல்வன் புதனை மணந்து கொண்டார்..
இனி இந்த வம்சங்கள் எப்படி கிளைகள் பரவி ஆல் போல் தழைத்தன என்பதனை அடுத்து பார்ப்போம்..
நாளை சந்திப்போம்