அருள்மிகு ஸ்ரீ ஜெய நரசிம்மர் நங்கவள்ளி சேலம் மாவட்டம்
ஸ்தல புராணம்:
வடக்கில் இருந்து பிழைப்பு தேடி வந்த ஒரு பெண் தலையில் ஒரு கூடையில் பால் தயிர் சுமந்து வந்து கொண்டு இருந்தாள். அச்சுமை பாரம் அதிகமாகி உள்ளது. திறந்து பார்க்க அதில் இரு சாளக்கிராம கற்கள் இருந்து உள்ளன. அப்பெண் அறியாமையால் அதனை எடுத்து போட்டு விட்டு மீண்டும் நடக்க பாரம் மீண்டும் அதிகமாக கூடையில் மீண்டும் அதே சாளக்கிராம கற்கள் இருந்து உள்ளன. அவள் இம்முறை அக்கற்களை அருகில் இருந்த ஒரு குளத்தில் வீசிவிட்டு தன் படையைத் தொடர்ந்து உள்ளாள். மீண்டும் கூடையை திறந்து பார்க்க உள்ளே சாளக்கிராம கற்கள் நனைந்த வண்ணம் இருந்துள்ளன. அப்போது ஒரு அசரீரியாக பெருமாள் தான் அகோபிலத்தில் இருந்து இங்கே வந்து உள்ளதாகவும் அங்கே ஒரு புற்றில் உள்ளதாக அவரை கோயில் வைத்து ப்ரதிஷ்டை செய்ய ஆக்ஞை ஆகி உள்ளது. கோயிலில் அந்த இரு சாளக்கிராம கற்கள் ப்ரதிஷ்டை செய்ய பண்பாட்டு பூஜை செய்ய படுகிறது. 1989 ல் அகோபில மட ஜீயரும் சங்கராச்சாரியார் வந்து இருந்து கவச நரசிம்மர் ஸ்தாபிதம் செய்து உள்ளனர். இங்கே பெருமாள் நமக்கு வாக்களித்து அருள் பாலிக்கிறார்.


