கி.மு…..கி.பி(பதிவு அத்தியாயம் 3)

சிந்து சமவெளி நாகரிகம்

    இந்நாகரீகம் மெஹர்கர் நாகரீகத்தின் சமகாலத்தில் எழுந்தது.  மெசொப்பொத்தேமியா,சீனா போன்ற இடங்களில் தோன்றிய மிக பழமையான நாகரிகம்.

சிந்து சமவெளி நாகரிகம்

   இன்றைய பாகிஸ்தானினிலுள்ள சிந்து நதியை ஒட்டி கி.மு 3000க்கும் 2500க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்சத்தில் இருந்தது.

     மேற்குறிப்பிடும் நாகரீகங்களுக்கும் இத்தொடருக்கும் என்ன தொடர்பு என்று வாசகர்கள் கேட்கலாம்..இச்சமகாலத்தில்தான் கங்கை மற்றும் யமுனைப் பிரதேசங்களில் நாடுகள் உருவாகி உள்ளன.. வடமேற்கே இருந்த மக்கள் கிழக்கு நோக்கி பெயர்ந்து பரவலாகக் குடியேற்ற ங்களை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது.. மகாபாரதத்தில் சிந்து நாடு, காந்தாரம், கேகேய நாடு என்று குறிப்புகள் உள்ளன..இவை யாவும் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளாகும்..அதே போன்று தான் யவனர்கள், அந்தகர்கள் பங்கு கொண்டதாகக் கூறப்படுகின்றது.. இவர்கள் யாவரும் வடமேற்கு பகுதியைச் சார்ந்த அயல்நாட்டினர்.

         நான் சமீபத்தில் watsup மூலம் பெறப்பட்ட ஒரு வீடியோவை பார்த்தேன்.. அதில் பங்கு கொண்டு பேசிய திரு. T.K.R. Rajan, Director, Indian Science Monitor என்பவர் கூறுகையில்..

    ” ஆப்கானிஸ்தானில் உள்ள அங்கோலா என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிருஷ்ணர், பலராமன் உருவம் பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன.

   1920வரை இராமாயணம் மகாபாரதம் ஆகியனவற்றை ஆராய்ச்சி செய்ய யாரும் முன்வரவில்லை.. காரணம் இதிகாசங்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தனர்.. அதன் பின்னர் தான் உண்மையை அறிந்து கொள்ள Fact finding Intellectual debate தொடங்கி உள்ளது..இது பற்றி 500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுத பட்டுள்ளன.. ஆயினும் இது வரை இதில் முடிவு ஏதும் அடையப் படவில்லை..மேலை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பல விவரங்கள் வெளி வந்தது.. அதன் காரணம் அங்கே மாற்றம் அடைந்த பாரம்பரியம்.. இங்கே நமது நாட்டில் பாரம்பரியம் மாற்றம் அடையாதது.. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் கடந்த 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியத்திலும் நாகரீகத்திலும் பெருத்த மாற்றம் ஏதும் இல்லை.. நமது காசி நகரம்,மதுரா போன்ற நகரங்களிலும் இதுவரை ஒரே மாதிரியான நாகரீகங்கள் தான் இன்று வரை உள்ளன.. உதாரணமாக காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் தொடர்ந்து occupation இருப்பதால் அகழ்வாராய்ச்சி செய்ய இயலாது.. மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடம் என்று சொல்லப் படும் கிருஷ்ணர் ஜன்மபூமி இப்போது உள்ள இடத்தில் இருந்து சுமார் இருநூறு மீட்டர் தூரத்தில் உள்ளது..ஆனால் அங்கே இஸ்லாமிய மக்கள் ஏழு தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றனர்..எனவே அவர்களை அப்புறப் படுத்தி அகழ்வாராய்ச்சி செய்வது என்பது நினைக்கவும் முடியாத செயல்..ஆனால் மேற்கத்திய நாடுகளான பிரான்ஸ் எகிப்து ஆகிய நாடுகளில் காலமாற்றத்தின் காரணமாக நாகரீகங்கள் மாறியுள்ளன.

    S.R. Rao  என்பவர் 2001ல் மேற்கொண்ட ஆராய்ச்சியில் குஜராத்தில் gulf of kambe எனும் இடத்தில் கடலின் கீழே துவாரகை நகரம் இருந்ததற்கு ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன..T.L.dating அடிப்படையில் கண்டறிந்து கி.மு 3100 ஆண்டுகளுக்கு முன்பாக துவாரகை நகரம் இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது..

     மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் 150 இடங்களில் தற்போதும் 60 இடங்கள் அதே பெயரில் அழைக்கப்படுகின்றன.. உதாரணமாக குருக்ஷேத்திரம், மதுரா, அஸ்தினாபுரம் இதரவை..,

    போர்னியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் குருக்ஷேத்திரம் பற்றி குறிப்புகள் உள்ளன.. மகாபாரதத்தில் பலராமன் சரஸ்வதி நதி கரையோரம் நடந்து சென்ற போது குறுக்கிட்ட நகரங்கள் எனக் குறிப்பிட்ட இடங்கள் இன்றும் அதே பெயரில் அழைக்கப்படுகின்றன..

       மத்திய பிரதேசத்தில் பெஸ்நகரில் உள்ள கருட ஸ்தூபியில் ஹிலிதரஸ் என்கிற கிரேக்கர் தமது கடவுள் வாசுதேவன் என்று குறிப்பிடுகிறார்.. அக்கால கட்டம் 165 B.C ஆகும்.. கண்ணன் வழிபாடு அப்போதே இருந்துள்ளது..

   புலிகேசி கல்வெட்டில் 3640க்கு முன்பு மகாபாரதப் போர் நடந்து உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..

2001க்கு பிறகு ஆராய்ச்சி ஏதும் நடைபெறவில்லை என்பது மிக மிக துரதிர்ஷ்டம் ஆகும்..

இராமாயண காலத்தைப் பொறுத்த மட்டில் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் உள்ளன..

Dr. Vartak எழுதிய Vatsav Ramayana என்ற புத்தகத்தில் இராமர் பிறந்தது 4 டிசம்பர் 7323 B.C என்று குறிப்பிடுகிறார்.. இதற்கு ஆதாரமாக ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட்ட வானவியல் சாஸ்த்திரங்களின்படி குறிக்கப்பட்டுள்ள ” திதிகள்” மூலம் தெரிவிக்கிறார்..

திரு. புஷ்கர் பட்நாகர் 2005ல் வெளியிட்டுள்ள புத்தகத்தில் வான சாஸ்திர அடிப்படையில் இராமாயணத்தை ஆராய்ந்து கி.மு 5100 அதாவது இன்றைக்கு 7120 ஆண்டுகளுக்கு முந்தையவர் இராமர் என்று கூறுகிறார்.. இவர் இந்த ஆராய்ச்சிக்காக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உழைத்து நவீன கம்ப்யூட்டர் சாப்ட்வேர் முதலியவற்றை பயன்படுத்தி உள்ளார்.. இவரது ஆய்வின் படி:

  • சரஸ்வதி-சிந்து நதி நாகரீகதா தடயங்கள் கி.மு..8000 என்று காட்டுகின்றன.
  • ரிக் வேதத்தின் பழமையான பகுதிகளில் கி.மு 6500 என்று வானியல் குறிப்புகளால் தெரிகிறது.
  • இராமாயணத்தின் காலம் கி.மு 5100
  • ரிக் வேதத்தின் கடைசி மண்டலம் கி.மு 5000
  • மகாபாரத யுத்த காலம் கி.மு 3137
  • சரஸ்வதி நதி மறைந்த காலம் கி.மு 1900
  • வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தில் இரண்டு இடங்களில் சரஸ்வதி நதி பற்றி குறிப்பிடுகிறார்
  • பரதன் அயோத்தி நகருக்கு திரும்பி வரும்போது சரஸ்வதி நதி வழியாகத்தான் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
  • ஆக இராமர் கி.மு 1900 க்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது.
  • இருப்பினும் எவ்வளவு காலத்திற்கு முன் என்பதில் மேலும் சில முரண்பாடுகள் உள்ளன.. அவற்றை பற்றி அடுத்து தெரிவிக்கிறேன்.
  • நாளை சந்திப்போம்
Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: