



இராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு சென்று கொண்டிருந்த போது வழியில் அகரம் செனறாயப் பெருமாள் என்கிற வளைவு பார்த்து அந்த கோயிலுக்கு சென்றேன். கோயில் நாலாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. அகரம் வெள்ளாஞ் செட்டியார்கள் பராமரிப்பில் உள்ளது. இந்து அறநிலையத்துறை திட்டத்தின் கீழ் உள்ளது. பெருமாள் புற்றின் வடிவமாக சர்ப்ப ரூபத்தில் உள்ளதால் திருமஞ்சனம் இல்லை. ஆனால் அப்புற்றில் இருந்து சற்று தொலைவில் ஒரு வேப்ப மரம் உள்ளது. அங்கே மூலஸ்தானத்தில் இருந்து வழி உள்ளது.பெருமாள் சர்ப்ப ரூபத்தில் அங்கே உள்ள புற்று த்வாரத்தில் நுழைந்து மூலஸ்தானம் வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வேப்ப மரத்தின் அடியில் சர்ப்ப ரூபமாக பெருமாள் எழுந்தருளி உள்ளார். அந்த மூர்த்தத்திற்குதான் திருமஞ்சனம் செய்ய படுகிறது.