இதிகாச காலங்கள்
இந்துத் தொன்மவியல் என்று சொல்லப்படுகின்ற புராணங்களில் (Mythology) மற்றும் வேத மரபுப்படி இந்த பிரபஞ்சத்தில் பதினான்கு உலகங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. அவை மேலுலகம் ஏழு, கீழுலகம் ஏழு.
மேலுலகம்:
சத்யலோகம்.
- தயாலோகம்
- ஜனோலோகம்
- மஹர்லோகம்
- சுவர் லோகம்
- புவர்லோகம்
அதே போன்று கீழுலகம் ஏழு உள்ளன.
- அதலலோகம்
- விதலலோகம்
- சுதலலோகம்
- தலாதலலோகம்
- மகாதலலோகம்
- ரசாதலலோகம்
- பாதாள லோகம்

இவற்றில் மேலேயுள்ள ஆறு லோகங்களும் நன்மை தரும் உயர் நிலை தன்மை கொண்டதாகவும் அதில் சத்யலோகம் படைப்பு கடவுளான பிரம்மாவின் உலகம்.. கீழே உள்ள ஏழு உலகங்கள் தீய சக்திகளின் குறியீடுகள் ஆகும்.. அதில் பாதாள லோகத்தில் வாசுகி எனும் பாம்பு வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்த பதினான்கு உலகங்களை பற்றியும், அதன் தலைவர்கள், அங்கே வாழ்பவர்கள், அந்த உலகத்தின் தன்மை பற்றியும்”அகத்தியர் பூரண காவியத்தில்” கூறப்பட்டுள்ளது.. மேலும், தேரையர் உள்ளிட்ட பல்வேறு சித்தர்கள் தங்கள் பாடல்களில் பகிர்ந்து உள்ளனர் (நன்றி: sitharkal.com)
இந்து புராணங்களில் மூலங்கள் ஆறாகப் பகுக்கப்படுகின்றன..அவை
- வேதங்கள்
- உபநிடதங்கள்
- பிரம்ம சூத்திரம்
- பகவத்கீதை
- புராணங்கள்
- இதிகாசங்கள் ஆகும்
இவற்றில் வேதங்கள் நான்கு, இதிகாசங்கள் இரண்டு.. அவை இராமாயணம், மகாபாரதம் ஆகியன.. மற்ற வேதங்கள் உபநிடதங்கள் பிரம்ம சூத்திரம் பகவத் கீதை புராணங்கள் குறித்து மற்றும் ஒரு தொடரில் விரிவாக அளிக்கிறேன்.
திருமால் என்றும் மகாவிஷ்ணு என்றும் அழைக்கப்படும் கடவுளான ஸ்ரீ விஷ்ணு வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக வழிபடும் அன்பர்கள் ஏராளம்.

இவர் பிறப்பும்,இறப்பும் அற்றவர் ஆதலால் பரப்பிரும்மம், பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறார்.. விஷ்ணு என்ற சொல்லுக்கு” சர்வ வ்யாபி” எங்கும் நிறைந்தவர் என்று பொருள்.. இவர் உலகில் அதர்மம் தலை தூக்கும் போதேல்லாம் அவதாரங்கள் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் எடுத்த தசாவதாரங்களில் இராம மற்றும் கிருஷ்ணர் அவதாரங்கள் குறிப்பிடத்தக்கது..
ஸ்ரீ விஷ்ணுவின் நாபியில் இருந்து உதித்தவர் ப்ரும்மா என்பவர் சிலர்..

சிலர் ப்ரும்மா சுயம்புவானவர் என்றும்கூறுவர்..பரப்ப்ரும்மமாவாகிய திருமால் பஞ்சபூதங்களைக் கொண்டு உயிரினங்களைப் படைக்கச் செய்தார்.. அவரால் அறிவுறுத்தியபடியும், வேதங்களில் கூறப்பட்டவை களையும் வைத்து பிரம்மன், படைப்பு த் தொழிலைச் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன..
படைக்கப்பட்ட அப்பொருள் கள் எவ்வாறு பயனுற வேண்டும் எனக் கூறுவதே இதிகாசங்கள்.. நாம் இக்கால நடைமுறைக்கு வருவோம்.. உதாரணமாக நாம் ஒரு வாஷிங் மெஷின் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.. அந்த மெஷினுடன் அந்த மெஷினை எவ்வாறு உபயோக படுத்த வேண்டும் என்று ஒரு வழிகாட்டி புத்தகம்( illustration literature) கொடுத்து இருப்பார்கள்..நாம் அதனைப் படித்து புரிந்து கொண்டு அந்த மெஷினை பயன்படுத்த வேண்டும்.. இங்கு தான் நமது சிக்கல்.. நம்மில் பலர் அதனைத் திறந்து கூடப் பார்ப்பது இல்லை..இவை போலத்தான் இதிகாசங்கள்.. நாம் எப்படி வாழவேண்டும் என்று எடுத்துரைப்பது..
நாம் வழிகாட்டி புத்தகம் படிக்க மாட்டோம் என்று தெரிந்த அந்த வாஷிங் மெஷின் உற்பத்தியாளர் நமக்கு செயல் முறை விளக்கம் (Demo) செய்து காட்ட ஒரு பிரதிநிதியை அனுப்புவார்..அது போலவே இறைவன் அவன் பிரதிநிதியாக அவனே அவதரித்து வாழ்ந்து காட்டுகிறான்..
ஒரு மனிதன் எவ்வாறு குணவானாக வாழவேண்டும் என்பதனை நிகழ்த்திக் காட்டியது இராமாவதாரம்.. அதர்மம் செய்பவனை நியதி மீறியாவது அழித்து தர்மத்தை நிலை நாட்டியது கிருஷ்ணர் அவதாரம்..
இராமாயணம், மகாபாரதம் ஆகிய காவியங்களின் காலத்தை ஆராயும் முன் நாம் கண்டிப்பாக மெஹர்கள் நாகரீகம், சிந்து சமவெளி நாகரிகம் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்..
மெஹர்கள் பண்பாடு கி.மு. 7000–2500/2000 காலம் தொடர்பு உடையது.. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் காணப்படுகிறது..

இது சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட நாகரிகம்.. இது போலன் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சித் சமவெளிப் பகுதியில் சிந்து நதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே குவாட்டா, கலாத், சிபி ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.. பிரான்ஸின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1974ல் கண்டு பிடித்த மிகப்பழமையான குடியேற்றங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.. அதன் தடயங்கள் கி.மு7000 ஐச் சார்ந்தவை.. இதன் செப்புகால மக்கள் வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுடன் தொடர்பு உள்ளவை..
நான் ஏன் தொடர்பில்லாமல் இவற்றை விவரிக்கிறேன் என்பது போகப்போக தெரியும்