முற்றத்தில் ஊஞ்சல்
வெற்று வானில் விண்மீன்கள் வெண்ணிலா
சுற்றிலும் பசுமை
சுகமான காற்று
தொட்டிழுக்கும் மண் மணம்
தொடர்ந்து வரும் புள்ளோசை
கட்டிலில் தந்தை
காலடியில் அன்னை
வெற்றிலை மடித்துத் தர
வெறும் வாயும் அதை மெல்ல
அன்றைய நிகழ்வுகள் யாவும் அங்கே தான் அசை போடும்
கொட்டிலில் காராம் பசு
முட்டிக் குடிக்கும் அதன் மழலை
நான் விட்டுச் சென்ற சுவடுகள்
இனி நான் எங்கே தேட…
கிராமத்தை பழமை என புலம் பெயர்ந்த புண்ணியரே நினைவு கொள்ள இக் கவிதை