
மகாபாரதத்தில் முக்கிய பங்களிப்பு அளித்த மாமனிதர்கள்.இதிகாச புராணங்களில் மகாபாரதம் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியத்துவம் கொண்ட ஒரு காவியம்.. இம் மாபெரும் நிகழ்வு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக லூசியானா ஸ்டேட் யுனிவர்சிட்டி யின் ஒரு ஆய்வு மூலமாக தெரிகின்றது. இக்காலகட்டத்தில் மேற்படி காவியங்கள் வாழ்க்கை தத்துவங்கள் மற்றும் முறைகள் ஆகியவற்றை தெளிவாக எடுத்துக் காட்டும் உன்னத வழிகாட்டிகள்..இக்காவியத்தில் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.. அவர்கள் இக்காவியத்திற்கு அளித்த பங்களிப்பு அளவிட முடியாத ஒன்று..அக்காவிய நாயகர்கள் சிலர் அதிக பங்களிப்பு செய்து உள்ளனர்.. சிலரது பங்களிப்பு சிறிதே ஆனாலும் மிக சிறப்பானதும் முக்கிய அம்சங்கள் கொண்டதும் ஆகும். அவர்களின் பங்களிப்பு குறித்து சில ஆதாரங்களின் அடிப்படையில் இக்கட்டுரை வரையப்பட்டது..
இனி காவிய கட்டுரைக்கு உள் நுழைவோம்..
இந்த அகண்ட பாரதத்தில் பல நாடுகள் பல அரசர்களால் ஆளப்பட்டு வந்தது.. தங்களின் எல்லைகளை விரிவாக்கம் செய்யவும் தங்களின் வீர தீர செயல்பாடுகளை வெளிப்படுத்தவும் அந்த மன்னர்கள் அவ்வப்போது சண்டை இட்டு வந்தனர்.. மண்ணாசை தான் மகாபாரத நிகழ்வுகளின் வித்து..
மகாபாரதத்தில் முக்கிய பங்களிப்பு அளித்த ஒரு நபர் சூழ்ச்சி நாயகன் சகுனி..
இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே இக்கதாபாத்திரத்தினை அறிமுகம் செய்ய காரணம் என்ன என்று நீங்கள் வினவலாம்.. ஆனால் சகுனியின் சூழ்ச்சிகளே மகாபாரதத்தில் பல முக்கிய திருப்பங்களை தந்துள்ளன.
இப்பூவுலகில் பாரதத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தானின் மேற்கு பகுதியும் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியும் சேர்ந்த நாடு காந்தாரம் என் அந்நாளில் அழைக்கப்பட்டது..இதனை ஆண்டு வந்த மன்னர் சுபலன் ஆகும்..
சகுனி அவனது தந்தை சுபலனின் நூறாவது மகன். புத்திசாலி..அவன் ஒரு தீர்க்கதரிசியும் கூட..
அவன் நாட்டில் இல்லாத போது அவனது தந்தை சுபலன் கங்கை மைந்தன் பீஷ்மர் வற்புறுத்தலின் பெயரில் அவனது தங்கை காந்தாரியை கண்பார்வை இழந்த திருதிராஷ்டிரனுக்கு மணம் முடித்து வைத்தார்

..அக்கொடுமையை தாங்காமல் சகுனி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி பீஷ்மரை பழிவாங்கும் நோக்கில் முடிவெடுத்தான்.சூதினில் சிறந்தவன் என்பதினால் தமது பழிவாங்கும் நோக்கத்திற்காக தாயக்கட்டைகளை ஆயுதமாக தேர்வு செய்கிறான்.
அவனது தாயக்கட்டைகள் அவனது தந்தை சுபலனின் விரல் எலும்புகள் மூலமாகவோ அல்லது அவரது தொடை எலும்புகள் கொண்டோ செய்யப்பட்டது என சில கருத்துக்கள் உள்ளன.. மாறாக மேற்படி தாயக்கட்டைகள் தந்தத்தினால் செய்தது என்றும் சகுனியின் தீர்க்கதரிசனம் காரணமாகவே அவன் சூதில் வெற்றி பெற்றான் என்பதும் ஒரு சிலர் கருத்து

..எது எப்படியோ தாயக்கட்டைகள் சகுனியின் எண்ணத்திற்கு கட்டுப்பட்டு அவன் அவைகளை கையாண்ட விதத்தின் வாயிலாக பாண்டவர்கள் வாழ்வைப் புரட்டிப் போட்டது என்பது உண்மை..
சகுனிக்கு மனைவி உண்டு என்றும் அவள் பெயர்ஆர்ஷி என்றும் சில கருத்துக்கள் உள்ளன.. ஆயினும் அவனது மனைவி யார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்ற மாற்றுக் கருத்துகள் உள்ளன.. ஆனால் சகுனிக்கு இரு மகன்கள் உள்ளனர்.உலூகி மற்றும் வ்ருகாசுரா என்பது வரலாற்று உண்மை.. இவர்களில் வ்ருகாசுரன் தனது தந்தை சகுனியுடன் அஸ்தினாபுரத்தில் வசித்து வந்து உள்ளான்…உலுகி தன் தந்தை சகுனியை காந்தாரம் திரும்புமாறு பலமுறை வற்புறுத்தியும் சகுனி அதனை ஏற்காமல் அஸ்தினாபுரத்திலேயே இருந்து தமது பழிவாங்கும் நோக்கத்திற்காக பகடையை உருட்டுவது போல தமது எண்ணங்களை உருட்டி மகாபாரதத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளான். சகுனிக்கு பாண்டவர்கள் மீது எந்த விதமான நேர்விரோதமும் இல்லை. மாறாக தனது தங்கை காந்தாரியின் எதிர் கால வாழ்க்கை பாழாகப் போனதற்கு கங்கை மைந்தன் பீஷ்மர் தான் காரணம் என்று கருதி பீஷ்மரை பழிவாங்கும் நோக்கில் அஸ்தினாபுரத்தில் தங்கி சூழ்ச்சிகள் பல செய்கிறான்.. தான் தன் பகடையை தன் எண்ணம் போல் செயல் பட வைப்பது போல தன் சகோதரி காந்தாரியின் மைந்தன் துரியோதனனை பகடை போல உருட்டி தன் கைப்பாவை ஆக்குகிறான்.

தன் தங்கையின் வாழ்க்கை பாழாகி போனதற்கு பீஷ்மரை பழிவாங்கும் நோக்கில் செயல் பட்டாலும் அதற்கு காந்தாரி யின் நூறு மக்களை பலி ஏன் கொடுத்தான் என்ற கேள்வி இங்கே எழுகிறது.. பீஷ்மரை வாளேந்தி போர் புரிந்து வீழ்த்துவது அவனால் இயலாத ஒன்று..ஆகவே பங்காளிச் சண்டடையை உருவாக்கி அதன் மூலம் பீஷ்மருடன் பாண்டவர்கள் போர் புரிய திட்டம் தீட்டி அதன்படி செயலாற்றினான்.
சகுனியின் பங்கு இல்லை என்றால் மகாபாரதத்தில் திருப்பங்களோ,சுவாரஸ்யமான நிகழ்வுகளோ ஏதும் இருந்திராது. பாண்டவர்களைக் கொண்டு பீஷ்மரை பழி தீர்த்துக் கொள்ள தமது எண்ணத்தில் உறுதியாக நின்று சகுனி பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் மூலம் பீஷ்மரை சாய்த்து இறுதியில் குருக்ஷேத்திரப் போரில் பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனால் வீழ்த்தப்படுகிறான்..
மகாபாரதத்தில் முக்கிய பங்களிப்பு செய்த நபர்களின் வரிசையில் முன் நிற்பவன் சகுனியே ஆகும்..குருக்ஷேத்திர போர் தவிர மற்ற நேரங்களில் அவன் ஆயுதம் ஏந்தியதாக தெரியவில்லை. அவனது பகடைகளே அவனது ஆயுதம்.. அவற்றை வைத்தே ஒரு முழு காவியத்தை அரங்கேற்றியவன் ஒரு சவாலான நபர் என்பதில் ஐயமில்லை.

இராமாயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இராவணனுக்கு சில நற்குணங்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்டு.
அதேபோல் சகுனிக்கும் சில நற்குணங்கள் உண்டு போலும்..அதனைப் போற்றும் வகையில் கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் மாயங்கோட்டு மலஞ்சருவு மலநாடு கோவில் பவித்ரேஸ்வரம் எனும் கிராமத்தில் குருவர் சமூகத்தினால் சகுனிக்கு கோயில் நிர்மாணித்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

. இதிகாசத்தில் சகுனி சூழ்ச்சி நாயகன் ஆக விளங்கினாலும் சகுனி இக்கோவிலில் சிவனை வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.. அக்கோயில் சன்னதியில் ஒரு பாறை இருக்கை வடிவமைப்பு கொண்டதாக உள்ளது.இவ்விருக்கையில் அமர்ந்து சகுனி பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது..பாண்டவர்களைத் தேடி சகுனி இக் குரவர் சமூகத்தாரோடு இவ்விடம் வந்ததாகவும் குரவர்கள் தமது ஆயதங்களை பகுத்ததாகவும் அதனால் இவ்வூர் பகுத்தீஸ்வரம் என் வழங்கப்பட்டு பின்னாளில் பருத்தீஸ்வரம் என்று மருவியது என்றும் கூறுவர்..குரவர் சமூகத்தினர் சகுனியின் செயல்பாடுகள் ஒரு வஞ்சம் தீர்க்கவே என்றும் அவனது அறிவுக் கூர்மையும் தனது குறிக்கோளினை அடைய அவனது விடா முயற்சியும் சகுனியை ஒரு கதாநாயகனாகக் கருதியே குரவர் சமூகத்தினர் போற்றுகின்றனர்… மற்ற கோவில் வழிபாடு போல் அல்லாமல் கள், பட்டு மற்றும் இளநீர் ஆகியவற்றை படைத்து வழிபாடு செய்கின்றனர்.