அத்தியாயம். 1
பாரத நாட்டின் நிகழ்வுகள்
இத்தொடரின் தலைப்பு சற்று குழப்பமாக இருக்கிறது.. இல்லையா?! கிறிஸ்து பிறப்பதற்கு முன்… பின் எனக் குழப்பிக் கொள்ளாதீர்.. கிறிஸ்து விற்கும் இந்த தொடருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. பின்னர் ஏன் இந்த தலைப்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது..இது இந்தியாவின் மிகச்சிறந்த இரண்டு இதிகாசங்கள் தொடர்பு உடைய தொடர்.
நான் சொல்ல இருப்பது ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பதற்கு முன் பிறந்த பின்(கி.மு—கி.பி) பாரத நாட்டில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் தொடர்பான வரலாறு.. நான் படித்த, அறிந்த வரலாற்று விவரங்களையும் அறிந்த வரையில் தொகுத்து வழங்குகிறேன். ஸ்ரீ கிருஷ்ணரின் காலம் கி.மு 3228 என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.. மகாபாரதமும் அந்த காலகட்டத்தில் தான் நிகழ்ந்துள்ளது என்பதும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து..எனவே மகாபாரதத்தின் முந்தைய பிந்தைய நிகழ்வுகளின் அடிப்படையில் இக்கட்டுரை வரையப்பட்டது.. அதுவே என் நோக்கம்.. ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதத்தில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்..
ஒரு நிகழ்வின் அடிப்படையில் ஒரு ஆய்வு செய்ய யத்தனிக்கும் போது ஒரு காலத்தினைப் புள்ளியாக்கி அதற்கு முன்னரும் பின்னரும் பயணம் செய்வதே நியதி ஆகும்..ஆகவே ஸ்ரீ கிருஷ்ணர் ஜனனமும் மகாபாரத நிகழ்வுகளையும் மையப் புள்ளியாக நான் நிலைப்படுத்தி உள்ளேன்..
மகாபாரதத்தைப் பற்றி ஆய்வு செய்யும் காலத்தில் அதன் முந்தைய இதிகாசமான இராமாயணம் முக்கிய பங்கு வகிக்கிறது.. இராமாயணத்தில் இருந்து மகாபாரதம் வரை ஒரு கால கட்டமாகவும், மகாபாரத காலம் (ஸ்ரீ கிருஷ்ணரின் காலம்) மையப்படுத்தி, பின்னர் நிகழ்ந்தவைகளை ஒரு காலகட்டம் ஆகவும் மூன்று பிரிவுகளாக அளிக்க எண்ணி உள்ளேன்..
இதில் நான் குறிப்பிடும் யாவும் நான் படித்து கேட்டு அறிந்தவைகளே.. இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் மனமார மன்னிப்பு கோருகிறேன்…
Waiting.
LikeLike
Started
LikeLike