ஏத்தாப்பூர்
அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி கோபாலன் கோயில் சேலம்
ஸ்தல வரலாறு
இந்த கோயில் சேலம் ஆத்தூர் சாலையில் ஆத்தூருக்கு முன்பாக சற்று விலகிய சாலையில் சில தூரம் பயணம் செய்தால் உள்ளது. இக்கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. முன்னோரு காலத்தில் மைசூர் மகாராஜா இந்த பகுதியையும் ஆண்ட காலத்தில் சிவனுக்கு கோயில் கட்ட தமது திவான் சேஷாத்ரி அய்யங்காரிடம் பணித்தார். அவர் ஆற்று மணலை எடுத்து வந்து கட்டும் வேலையை துவங்கினார். அவ்வாறு ஆற்று மணலை எடுத்த போது ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் இந்த பெருமாளின் விக்ரகம் கிடைத்தது. திவான் சிவன் கோயில் கட்டுவதற்கு பதிலாக இப்பெருமாளுக்கு கோயில் கட்டி உள்ளார்.. மகாராஜாவின் கட்டளையை மீறியதற்காக தமக்கு தண்டனை கிடைக்கும் என்று தலைமறைவு ஆகிவிட்டார்.. ஒரு நாள் கட்டுமான பணியை பார்வையிட வந்த மகாராஜா தான் சொன்னதற்கு மாறாக இந்த கோயில் கட்டப்பட்டது அறிந்தார்.. கோயில் உட்புறம் வந்து பெருமாளைத் கண்டதும் அவரது அழகில் மயங்கிய மனம் மாறினார்..திவானை அழைத்து மீண்டும் சிவன் கோயிலைக் கட்டுமாறும் ஆனால் நித்யபடி பூஜை பெருமாளுக்கு செய்த பின்னரே சிவனுக்கு செய்ய வேண்டும் என்று பணித்தாராம்..
நான் சென்ற மார்ச் மாதம் சேலம் சென்றிருந்த போது தரிசனம் செய்தேன்.. அப்போது எடுத்த புகைப்படங்கள் கீழே..


