கும்பிட்ட கோயில்கள்

  நான் நேற்றைய பதிவில் சேலம் தேரடி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ரா‌ஜகணபதி கோயில் பற்றி கூறியிருந்தேன்.

    அடுத்து நான் தரிசனம் செய்தது கோட்டை மாரியம்மன் கோவில்.. இக்கோவிலும் அருகில் தான் உள்ளது.

சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மா பேட்டை மாரியம்மன் செவ்வாய் பேட்டை மாரியம்மன் சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன் சின்ன கடைவீதி மாரியம்மன் குகை மாரியம்மன் அன்னதானம் பட்டி மாரியம்மன் பொன்னம்மா பேட்டை மாரியம்மன் ஆகிய எட்டு மாரியம்மன் கோயில் களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்த அம்மன்.

   சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டவர்களால் இப்போது கோட்டை என்று சொல்லுமிடத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த போது இந்த கோட்டை மாரியம்மன் கோவிலையும் கோட்டை பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள்.கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரியம்மன் காவல் தெய்வமாக இருந்து இருக்கிறாள். தற்போது கோட்டை இல்லை.ஆனால் அப்பகுதியை கோட்டை மேடு என்று அழைக்கின்றனர்.

      அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசீக்கொண்டு உள்ளது.அதன் மேல் நாகபடம் உள்ளது. வலது மேற்கரத்தில் நாகபாசம் உடுக்கை ஏந்தி உள்ளாள். வலது கீழ் கரத்தில் திரிசூலம். இடது மேற்கரத்தில் அங்குசம் அமுத கிண்ணம். இடது கீழ் கரத்தில் கபாலம்.. வலது காலை தொங்கவிட்டு இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்து ஈசான திசை நோக்கி அமர்ந்துள்ளார்.

  • ஓம் சக்தி. பராசக்தி
விக்கிப்பீடியா

தேடுக

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்

Learn more
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்பெயர்பெயர்:சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்அமைவிடம்அமைவு:சேலம் , தமிழ்நாடுகோயில் தகவல்கள்மூலவர்:கோட்டை மாரியம்மன்கட்டிடக்கலையும் பண்பாடும்கட்டடக்கலை வடிவமைப்பு:கோவில்

அமைவிடம்

பெரிய மாரியம்மன்

கோவில் வரலாறுதொகு

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.
இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.
இக்கோட்டையில் அமைந்த இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் “கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி” என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.
இந்த கோட்டைக்குள் இருந்த அம்மனை திருமணிமுத்தாற்றின் அருகில் சேலம் கணக்கர் தெருவில் இருக்கும் திரு.கனகசபை முதலியார், சிவசங்கர முதலியார் ஆகியோர் இப்போதிருக்கும் இடத்திற்கு இடம் மாற்றம் செய்து கோயில் அமைத்து கும்பாபிசேகம் செய்தார்கள். அப்போது திருமணிமுத்தாற்றிலிருந்து அம்மன் அபிசேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து அபிசேகம் செய்தனர்.
கோட்டை மாரியம்மனை தரிசிக்க சுற்றிலும் இருக்கிற ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர். இவர்கள் தங்குவதற்கு இடவசதி இல்லை. தங்குவதற்கு இடவசதி இல்லாமல் பக்தர்கள் அல்லல்படுவதை அறிந்த சேலம் திரு.முத்துகுமார பிள்ளையும், பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தைக் கட்டி கொடுத்தார்கள்.
இந்த தர்ம சத்திரம் தான் கோயிலின் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இக்கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் அதை இடித்துவிட்டு அறநிலையத்துறை ஆணையர் அவர்களின் அனுமதியின்பேரில் ரூபாய் பன்னிரண்டு இலட்சத்தில் அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு பொங்கு மண்டபம் மற்றும் தங்கும் மண்டபம் ரூபாய் 1 லட்சம் மதிப்பில் “ஸ்ரீகோட்டை பெரிய மாரியம்மன் அறக்கட்டளை” சார்பில் நன்கொடையாக கட்டி முடிக்கப்பட்டு உபயோகத்தில் இருந்து வருகிறது. 1881-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் விசு ஆண்டு கார்த்திகை திங்கள் சேலத்தைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரின் மகள் நாகம்மாள் என்பவர் கோயில் வடபுறம் அமைந்துள்ள தளம் அமைத்தும், கட்டிடத்தைப் புதுப்பித்தும் கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறாக திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு, சேலம் நகர மக்களிடையேயும், சுற்றுப்புற கிராம மக்களிடையேயும் பிரபலமடைந்து வருகிறது. 1982-1989 ம் ஆண்டிலும் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு 81 அடி உயர இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 01.07.1993-ந் தேதியன்று திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

அன்னையின் திருக்கோலம்தொகு

           அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது.
            இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.

பூஜைகள்

ஆடித்திருவிழா

Last edited 1 year ago by TVA ARUN

விக்கிப்பீடியா

RELATED PAGES

வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

One thought on “கும்பிட்ட கோயில்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: