மச்சமாய் மனுவை சத்யலோகத்தில் காத்திட ஒரு நாவாய் கொண்டு இச்சகத்து உயிரினமும் விலங்குனமும் உய்யவே ஓர் உருவாய் நிச்சலனே நீர் வண்ணா கச்சி நகர் பேரருளாளா இச்சகத்தில் இன்னும் ஒருமுறையும் அவதரித்தல்ஆகாதோ!
தீர்வறியா பகை கொண்ட தேவர்களும் அவுணர்களும் பாற்கடலைக் கடைந்திடவே பரமன்தான் ஆணையிட தேர்வடமாய் வாசுகியை மந்திரத்தில் பிணைத்தழுந்த கூர்ம்மாய் அங்கு உதித்து மலை தாங்கிய மாதவனே அவதரிப்பாய்
மெய்யனே மாதவா மீள்விசும்பின் மாறனே வைய்யகத்தாய் பூமிதனை வசப்படுத்திய வீணனை தெய்வப்பன்றியாய் தீர்த்து வரமளித்தாய் உய்ய வழி காட்ட உதித்திடுவாய் உலகோனே
நாரணனே நமக்கெல்லாம் என்றிட்ட பாலகனின் கோர மதி படைத்த கொடுங்கோலன் இரணியனை தோரண தூணதினில் தோன்றியே அழித்த நம் பூரணனே நரசிம்மா இப்பூ உலகில் அவதரிப்பாய்
The prom on Dasavatharam is par excellence. God bless you. And you continue with your originality in composing. M. Y. Ram.
LikeLike
Extremely good. Desikan
LikeLike