” ஆலயம் தொழுதல் சாலவும் நன்று” என்றார்கள் ஆன்றோர்கள்..நான் இந்த ஆண்டின் துவக்கத்தில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சில கோயில்கள் தரிசனம் செய்தேன்..அதனைப் பற்றி என் அனுபவங்களை பகிர்கிறேன்
நான் கடந்த பிப்ரவரி 29 ந்தேதி சென்னையில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் மூலம் சேலம் சென்றடைந்தேன். எனது உறவினர் இல்லத்தில் தங்கி நான்கு நாட்கள் சேலம் நகரில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள கோயில்கள் தரிசனம் செய்தேன். எனக்கு கை கொடுத்தது சேலம் Red Taxi. அதனை ஏற்பாடு செய்து கொண்டு தினமும் கோயில்கள் தரிசனம் செய்தேன்.
பிள்ளையார் சுழி போட்டு செயலெதுவும் தொடங்கு என்பார்கள்..நான் முதலில் தரிசனம் செய்தது சேலம் தேரடி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி கோயில். மிகவும் நெருக்கடியான வீதி..சுறுசுறுப்பான வாணிபம்..விநாயகர் மூஷிகத்தின் மேல் அமர்ந்துள்ளார்..அருகில் சுகவனேசுவரர் கோயில்..இக் கோயில் நானூறு ஆண்டுகள் பழமையான கோயில்..மிகவும் வரப்பிரசாதி..வேண்டுவோர்க்கு வேண்டியதை வழங்கும் விநாயகர் என்பதால் பக்தர்கள் கூட்டம் நிறைய வருகின்றனர்..
கோயில் நேரம் காலை 6 முதல் 11வரை மாலை 4 முதல் 8 மணி வரை..
நான் சென்று இருந்த வேளையில் அந்த தெருவில் பாதாள கழிவு வாய்க்கால் அமைத்தல் பணி நடந்து கொண்டிருந்த தால் வெளியே நின்று கோயிலை புகைப்படங்கள் எடுக்க இயலவில்லை..சன்னதியை புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை..
இக் கோயிலின் அருகிலேயே ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில் சுகவனேசுவர் கோயில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகியன உள்ளன.. அவைகள் குறித்து அடுத்த பதிவில் பகிர்கிறேன்
