( மைக்ரோ கதை)
கொரோனா தாக்குதல் தொடர்ந்து அந்நகரத்தில் கட்டுப்பாடுகளின் தளர்வுகளால் இயல்பு வாழ்க்கை சிறிது திரும்பி கொண்டு இருந்தது.. சாலைகளில் ஒரு சில கார்களும் டூ வீலர்களும் பரவலாக ஓடிக்கொண்டிருந்தது.. அந்த ரோட்டில் சில கடைகளும் திறக்கப்பட்டு பிஸினஸ் கொஞ்சம் நடந்து கொண்டிருக்கிறது..டீ கடைகளும் தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களை திருப்தி பண்ணிக்கொண்டு இருந்தன..
தலை நிமிர்ந்த அந்த பெண் பதில் சொல்லாமல் அந்த பகுதியில் ஒரு மூலையில் இருந்த நபரைக் காட்டினார்.. இவர் அங்கே சென்று “ அய்யா..இங்க பிரதம மந்திரி திட்டத்தின் கீழே கடன் கொடுக்கிறதா சொன்னாங்க…’” என்று இழுத்தார்.. அந்த நபர்” அய்யா! உக்காருங்க” என்று அங்கிருந்த சேரைக் காண்பித்தார்..நமது நபரும் சேரில் ஒரு நுனியில் உட்கார்ந்தார்..
வங்கி ஊழியர்” இப்போ சொல்லுங்க..என்ன விஷயம்?”
“ விஷயம் பெருசா இல்லிங்க.. இந்த பேங்க்ல சொந்தமா தொழில் செய்ய கடன் கொடுக்கிறதா சொன்னாங்க.. அதான்..”
“சரிங்க..என்ன தொழில் செய்யலாம்னு இருக்கீங்க”
“வாத்துங்க..வாத்தை வாங்கி முட்டை வியாபாரம் செய்யலாம்னு”..” இங்க நெறய வாத்து இருக்கு.. போங்க லோன் கிடைக்கும்னு ஒருத்தர் சொன்னாங்க”
அந்த வங்கியால் பாதிக்கப்பட்ட நபர் யாரோ சொல்லி விட்டு இருக்கிறார்கள்..
“அதுல என்னங்க லாபம் கிடைக்கும்? கடனை அடைக்க முடியாது” “ ஆதார் கார்டு ரேஷன் கார்டு எதாவது வச்சு இருக்கீங்களா?”
“இல்லிங்க…அப்படி நீங்க சொல்லக் கூடாது…பாருங்க.. நீங்க பார்க்கணும்னே கையோட ஒரு வாத்தை கொணாந்திருக்கேன்”
பையில் இருந்த வாத்தை அந்த அதிகாரி டேபிளில் வைத்தார் நமது நண்பர்.. சுதந்திர காற்றை சுவாசித்த அந்த வாத்து சுற்றும்முற்றும் தன் பார்வையை செலுத்தியது.. அடுத்த நிமிடம் அது எந்த பூச்சியைப் பார்த்ததோ தெரியவில்லை.. டேபிளில் இருந்து பறந்து கீழே குதித்தது..அதனை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் அங்குமிங்கும் ஓடினர்.. அந்த வாத்து வாடிக்கையாளர் பக்கம் போய் அவர்களை அலற விட்டது.. நமது நண்பர் வாத்தைப் பிடிக்க பின்னாடியே”பக்பக்” என்று கூவிக் கொண்டே அதனைத் துரத்தினார்.. இதற்கிடையில் அங்குமிங்கும் ஒடிய வாடிக்கையாளர் ஒருவர் ஃபயர் எக்ஸ்டிங்குஷரில் மோதி அதனைத் தள்ள அது கீழே விழுந்ததில் பெரிய சப்தம் கேட்டது…வாசலில் காவலுக்கு நின்றிருந்த செக்யூரிட்டி உள்ளே கொள்ளையர்கள் யாரோ புகுந்து விட்டார்கள் என்று எண்ணி துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார்…கேஷ் கவுண்டர் எதிரில் ஒரு நபர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருப்பதைக் பார்த்தார்.. சிலர் தாங்கள் செல்லும் வேலை சிறிது நேரம் தான் ஆகும் என்று தலை ஹெல்மெட்டை கழற்றாமல் இருப்பர்..
உள்ளே நுழைந்த செக்யூரிட்டி அந்த ஹெல்மெட் நபர் தான் கொள்ளையடிக்க வந்த நபர் என்று எண்ணி துப்பாக்கியை அந்த ஹெல்மெட் நபரின் கால் நோக்கி சுட அது வழக்கம் போல கேஷ் கவுண்டர் பக்கத்தில் இருந்த சுவற்றில் பாய்ந்தது.. இந்த குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் சிதறி ஓடினர்…கேஷ் கவுண்டரில் இருந்த கேஷியர் பதட்டத்தில் பர்க்ளர் அலார்மை காலால் அழத்திவிட்டார்.. வங்கியில் இருந்து அலார்ம் சப்தம் கேட்டதும் ரோட்டில் போய்க் கொண்டிருந்த மக்கள் வங்கி முன் கூடிவிட்டனர்.. இந்த சமயத்தைப் பயன்படுத்தி கேஷியர் தன் டேபிளில் இருந்த நான்கு லட்சம் ரூபாயை தன் பைக்குகள் மாற்றி வைத்துக் கொள்ளவும் வெளியே போலீஸ் வந்து நின்றது…இன்ஸ்பெக்டர் தனது மெகபோன் எடுத்து கொள்ளைக்காரர்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டு இருந்தார்…மளமளவென்று பல மீடியாக்களும் பத்திரிகை காரர்களும் கூடிவிட்டனர்…வெளியே வந்தவர் ஒரு சிலர் உள்ளே நடவாத ஒன்றை தங்கள் கற்பனை திறனைக் கூட்டி பரபரப்பாக நியூஸ் அளித்தார்கள்..நமது நண்பரும் கும்பலோடு வெளியே வந்து தெருவில் நடக்க துவங்கி விட்டார் தன் வாத்தை தேடி…அந்த வாத்து வேறு ஒரு பக்கம் ரோட்டில் ராஜநடை போட்டு போய்க்கொண்டு இருந்தது.. ஹெல்மெட் நபர் அதனைக் கழற்றி கையில் வைத்து கொண்டு கும்பலோடு வெளியே வந்து தெருவில் சென்று விட்டான்…அங்கே இருந்த ஊடகங்கள் இன்ஸ்பெக்டரிடம் கேள்வி கணைகள் தொடுக்க அவர்..” இந்த வங்கியில் இருக்கும் சிசிடிவி ஃபுட்டேஜ் வைத்து கொள்ளையரைப் பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை கொடுத்து க் கொண்டு இருந்தார் அந்த சிசிடிவி கேமரா பழுதாகி பல மாதங்கள் ஆகிறது என்ற விஷயம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.…ஊடகங்கள் அன்றைய இரவு”வங்கிப் பாதுகாப்பு” என்ற தலைப்பில் விவாதம் செய்ய தலா நான்கு கட்சிக்காரர்களை ஏற்பாடு செய்து கொண்டிருந்தன..சில காலத்தில் தீர்க்க முடியா வழக்காக போலீஸ் முடித்து வைத்தது.. மொத்தத்தில் நடைபெறாத ஒரு கொள்ளை நகைப்புடன் அரங்கேறியது…
oh super.. your hidden talent is coming out. keep going. ecellent
LikeLike
oh your hidden talent coming out.keep going.bet wishes
LikeLike
Thanks..be a regular reader..one more request.. please make my blog popular among your friends..A series is my next post கி.மு-கி.பி
LikeLike
Good try , continue .
LikeLike