விழும் அதனின்று எழும் ஒரு துளிர் அது விதை
கொழுக்கொம்பை அணைத்து படரும் அது கொடி
விடுதலை ஆதாரமாக்கி வியந்து பரவும் அக்கொடி
தொழும் இறையனார்க்கு அணி சேர்க்கும் மலர்
விழுதலினால் பலனுண்டு எனில் இறைவா
எனை விழ வைப்பாய் பின் எழ வைப்பாய் உனைத் தொழ வைப்பாய் மலராக